திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் எடுக்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்
செய்தி முன்னோட்டம்
திருப்பதியில் உள்ள வைகுண்ட துவார தரிசன டிக்கெட் மையம் அருகே புதன்கிழமை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
TTD ஏற்பாட்டில், வைகுண்ட ஏகாதசி மற்றும் வைகுண்ட துவார தரிசனம் ஜனவரி 10 முதல் ஜனவரி 19 வரை திட்டமிடப்பட்டுள்ளது.
10 நாள் சிறப்பு தரிசனத்துக்கான டோக்கன் பெறுவதற்காக 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியதில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அதன் காரணமாக ஏற்பட்ட தள்ளுமுள்ளில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து பதிலளித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இரங்கல்
சம்பவ இடத்திற்கு விரையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் நாயுடு பேசினார். காயமடைந்தவர்களை சந்திக்க முதல்வர் இன்று திருப்பதி செல்கிறார்.
சம்பவம் நடந்த TTD டோக்கன் கவுண்டர்களின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பையும் அவர் ஆய்வு செய்வார்.
இதற்கிடையில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வெங்கடேஸ்வர் மற்றும் ஜே.சி.சுபம் பன்சால் ஆகியோர் உடனடியாக காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ரூயா மருத்துவமனைக்கு வந்து, நிலைமையை ஆய்வு செய்து, காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தனர்.
திருப்பதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.