NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகளிடம் அத்துமீறிய நபரை பழிதீர்க்க குவைத்தில் இருந்து ஆந்திராவுக்கு வந்த தந்தை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிடம் அத்துமீறிய நபரை பழிதீர்க்க குவைத்தில் இருந்து ஆந்திராவுக்கு வந்த தந்தை
    அவரது புகாரின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அவரது வாதம்

    மகளிடம் அத்துமீறிய நபரை பழிதீர்க்க குவைத்தில் இருந்து ஆந்திராவுக்கு வந்த தந்தை

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 13, 2024
    03:49 pm

    செய்தி முன்னோட்டம்

    குவைத்தைச் சேர்ந்த 35 வயதான ஆஞ்சநேய பிரசாத் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி, ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம், ஒபுலவாரிப்பள்ளியில் தனது உறவினரைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

    ஆஞ்சநேயுலு (59) என்பவர் டிசம்பர் 6 மற்றும் 7ஆம் தேதி இரவு இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    ஆஞ்சநேயுலு, தனது மைனர் மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக பிரசாத் குற்றம் சாட்டினார்.

    அதோடு இந்த விவகாரம் குறித்து உள்ளூர் காவல்துறையினரிடம் தரப்பட்ட அவரது புகாரின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அவரது வாதம்.

    விவரங்கள்

    குவைத் திரும்பிய குற்றவாளி வீடியோவில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

    சம்பவத்திற்குப் பிறகு, குவைத் திரும்பிய பிரசாத், குற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட வீடியோவை வெளியிட்டார்.

    வீடியோவில், ஆஞ்சநேயுலு தனது மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தனது குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தினார் மற்றும் உள்ளூர் காவல்துறையின் செயலற்ற தன்மை குறித்து விரக்தியை வெளிப்படுத்தினார்.

    இந்த விவரங்களை போலீஸ் அதிகாரி என் சுதாகர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார்.

    குற்றச்சாட்டுகள்

    மகளின் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் புறக்கணிக்கப்பட்டதாக பிரசாத் கூறுகிறார்

    இந்தியாவில் வசிக்கும் பிரசாத்தின் 12 வயது மகள், தனது தாத்தா பாட்டியுடன் தங்கியுள்ளார். சில காலம் அத்தை லக்ஷ்மியுடன் அவர் வாசிப்பதற்காக சென்றுள்ளார்.

    இந்த நேரத்தில் தான் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமியின் மாமனார் சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

    சிறுமி நடந்த சம்பவத்தைப் பற்றி லட்சுமியிடம் கூறிய பின்னரும், இதுபற்றி அமைதி காக்கும்படி கூறப்பட்டதாக பிரசாத் தெரிவிக்கிறார்.

    பிரசாத்தின் மனைவி சந்திரகலா துஷ்பிரயோகம் பற்றி அறிந்ததும், அவர் உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

    எனினும் காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை எச்சரித்து விடுவித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது பிரசாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    குவைத்
    கொலை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஆந்திரா

    குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி  சந்திரபாபு நாயுடு
    வாக்காளர் கன்னத்தில் அறைந்த ஜெகன் மோகன் ரெட்டி கட்சி எம்.எல்.ஏ: பதிலுக்கு அடி விழுந்ததால் பரபரப்பு  ஜெகன் மோகன் ரெட்டி
    வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த ஜெகன் ரெட்டி கட்சி எம்எல்ஏ: தேர்தல் ஆணையம் கண்டனம்  தேர்தல்
    ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு  பாஜக

    குவைத்

    குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம் தீ விபத்து
    குவைத்தில் கட்டிட தீ விபத்தில் 40 மேற்பட்ட இந்தியர்கள் பலி; உடல்களை இந்தியா எடுத்துவர நடவடிக்கை இந்தியர்கள்
    குவைத் தீவிபத்தில் இறந்த 45 இந்தியர்களின் உடல்களுடன் கேரளாவிற்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் விமானம்
    குவைத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15,000 டாலர்கள் நிவாரணம்  உலக செய்திகள்

    கொலை

    ரசிகர் மன்ற நிர்வாகியை வைத்து கொலையை அரங்கேற்றிய கன்னட நடிகர் தர்ஷன் நடிகர்
    ரேணுகாசாமி கொலை வழக்கு: காவல்துறை பிடியில் சிக்கும் கன்னட திரையுலகின் பிரபல நடிகர்கள் தர்ஷன், சிக்கண்ணா  கன்னட படங்கள்
    தற்கொலை செய்து கொண்ட மேனேஜர்; 8 வருடங்களாக மாயமான அசிஸ்டன்ட்; தர்ஷனை சுற்றி பல மர்மங்கள் தர்ஷன் தூகுதீபா
    ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025