LOADING...
கர்நூல் பேருந்து விபத்து: ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி
பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுள்ளனர் (pc: India today)

கர்நூல் பேருந்து விபத்து: ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து தீப்பிடித்து 20 பேர் பலி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 24, 2025
08:01 am

செய்தி முன்னோட்டம்

ஆந்திர பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுள்ளனர். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு ஹைதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள சின்ன தெக்கூர் கிராமம் அருகே நடந்தது. சாலையில் பயணித்து கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்தது. தீ மிக வேகமாக பரவியதால், பலர் தப்பிக்க முடியாமல் உயிரிழந்தனர் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்சின் கோளாறு, ஷார்ட் சர்க்யூட் அல்லது எரிபொருள் கசிவு போன்ற காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது. பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 18 பயணிகள் உயிருடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

விபத்து விவரங்கள்

இறந்து போனவர்கள் சிலரின் உடல்கள் முற்றிலுமாக கருகிவிட்டதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, பேருந்து முழுவதும் வேகமாகப் பரவியது. முதலில் பேருந்தின் முன் பகுதியில் தீப்பிழம்புகள் வெடித்து பின்னர் வேகமாக பரவியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தீ வேகமாக பரவியதும், 12 பயணிகள் அவசரகால வழியை உடைத்து திறந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் சிகிச்சைக்காக கர்னூல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நடந்தபோது அப்பகுதியில் பலத்த மழை பெய்ததாகவும், அதுவே மோதலுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.