LOADING...
இன்று மாலை ஆந்திரா கடற்கரையை கடக்கும் 'மோந்தா' புயல்: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று மாலை ஆந்திரா கடற்கரையை கடக்கும் 'மோந்தா' புயல்: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2025
07:45 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 28) முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வரை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை துறை தெரிவித்துள்ளது. அதற்க்காக ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ள மாவட்டங்கள்- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி. அதோடு 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று (அக். 28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை. இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் படி, பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்தில் சில பகுதிகளில் பள்ளிகளுக்கு உள்ளூர் நிலைமையை பொறுத்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தால் கடலில் அலைகள் உயரும் வாய்ப்பு உள்ளது எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசியமின்றி கடலோர பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.