ஆந்திரா நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்தது
சென்னை அருகே நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது மெல்ல நகர்ந்து ஆந்திரா கரையோரம் சென்றுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்து விட்டதாகவும் அவர்கள் ஆறுதல் தெரிவிக்கின்றனர். முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன்படி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையில் புதுச்சேரி-ஆந்திரா இடையே சென்னை அருகில், நாளை, அக்டோபர் 17 அன்று கரையைக் கடக்கும். இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளுக்கு சிவப்பு அலெர்ட் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Twitter Post
#WATCH | சென்னையில் இன்று (அக். 16) அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு #SunNews | #ChennaiRains | #WeatherUpdateWithSunNews pic.twitter.com/scAZmkhun6— Sun News (@sunnewstamil) October 16, 2024 #WATCH | சென்னையில் இன்று (அக். 16) அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு #SunNews | #ChennaiRains | #WeatherUpdateWithSunNews pic.twitter.com/scAZmkhun6— Sun News (@sunnewstamil) October 16, 2024
Twitter Post
Some good news for KTCC (Chennai) - Steady rains to continue for a while -------------------- Though the Depression is expected to cross over Chennai, the convergence of winds will be north of the crossing area so people of Chennai can relax a bit. The extreme rains today from... pic.twitter.com/ap7gN2gTRL— Tamil Nadu Weatherman (@praddy06) October 16, 2024
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்த சூழலில், சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளது. மழைநீர் தேங்கும் போது, சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் எனவும், அதனால், ஆங்காங்கே பாதுகாப்பற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.