LOADING...
ஒரே நாளில் சவரனுக்கு ₹2,160 சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
தொடர் சரிவில் தங்கம் வெள்ளி விலை

ஒரே நாளில் சவரனுக்கு ₹2,160 சரிவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 19, 2026
10:17 am

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதன்படி, இன்று வியாழக்கிழமையும் (மார்ச் 19) விலை குறைந்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹270 குறைந்து ₹14,300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,160 குறைந்து ₹1,14,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹294 குறைந்து ₹15,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,352 குறைந்து ₹1,24,800 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் சரிவு

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹260 குறைந்து ₹11,980 ஆகவும், ஒரு சவரன் ₹2,080 குறைந்து ₹95,840 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே, வியாழக்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹10 குறைந்து ₹265.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,65,000 ஆகவும் விற்பனை ஆகிறது. மத்திய கிழக்கு போரால் பங்குச் சந்தைகள் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், தங்கம் வெள்ளி விலையும் குறைந்து வருவது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement