LOADING...
'aliens.gov' இணையதளத்தைப் பதிவு செய்த அமெரிக்கா; மர்மங்களை உடைக்கத் தயாராகும் டிரம்ப்
'aliens.gov' என்ற இணையதள முகவரியை வெள்ளை மளிகை பதிவு செய்துள்ளது

'aliens.gov' இணையதளத்தைப் பதிவு செய்த அமெரிக்கா; மர்மங்களை உடைக்கத் தயாராகும் டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 19, 2026
09:46 am

செய்தி முன்னோட்டம்

பல தசாப்தங்களாக திரைப்படங்களிலும் அறிவியல் புனைகதைகளிலும் மட்டுமே பேசப்பட்டு வந்த 'ஏலியன்கள்' குறித்த விவாதம், தற்போது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு நகர்ந்துள்ளது. வெள்ளை மாளிகை நிர்வாகம் அமைதியாக பதிவு செய்துள்ள 'aliens.gov' என்ற இணையதள முகவரி, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 18 (புதன்கிழமை) அன்று பதிவு செய்யப்பட்டுள்ள இந்தத் தளம், வெள்ளை மாளிகை (whitehouse.gov) மற்றும் சிஐஏ (cia.gov) போன்ற உயர்மட்ட அரசு நிறுவனங்கள் பயன்படுத்தும் அதே ஃபெடரல் சிஸ்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தத் தளம் நேரலையில் இல்லை என்றாலும், இது ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.

காரணம்

டிரம்ப்பின் அதிரடி உத்தரவு

இந்த இணையதள பதிவின் பின்னணியில் ஒரு முக்கியக் காரணம் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், பென்டகனிடம் உள்ள UFO மற்றும் UAP தொடர்பான அனைத்து ரகசிய ஆவணங்களையும் பொதுமக்களுக்கு வெளியிடுமாறு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். "இவை மிகவும் சுவாரஸ்யமான மற்றும் முக்கியமான விஷயங்கள்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த இணையதள முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

பின்னணி

ஏலியன் சர்ச்சை திடீரென வெளியானதன் பின்னணி

சில ஆண்டுகளுக்கு முன், முன்னாள் உளவுத்துறை அதிகாரி டேவிட் க்ரூஷ், அமெரிக்க அரசிடம் மனிதர்களால் உருவாக்கப்படாத தொழில்நுட்பங்கள் மற்றும் விண்கலங்கள் இருப்பதாக சத்தியம் செய்து வாக்குமூலம் அளித்தது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி 14 அன்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, "ஏலியன்கள் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது" என்று புள்ளிவிவர அடிப்படையில் பேசியது விவாதத்தைத் தூண்டியது. கடந்த 80 ஆண்டுகளில் 12,000-க்கும் மேற்பட்ட வினோதப் பொருட்கள் தென்பட்டதாகப் பதிவுகள் உள்ளன. 2026-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 'aliens.gov' என்பது வெறும் பெயருக்காகப் பதிவு செய்யப்பட்டதா அல்லது பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ரகசியத்தை உடைப்பதற்கான முதல் படியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement