வெள்ளை மாளிகை: செய்தி
விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்தியா அறிவுறுத்துகிறது
தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் , குடிமக்கள் விமானம் அல்லது தரைவழியாக ஈரானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
3 வாரங்களுக்கு இஸ்ரேல் - லெபனான் போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப் அறிவித்தார்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவு: இன்றைய சரிவுக்கு என்ன காரணம்?
புதன்கிழமையன்று இந்தியப் பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்க இழப்புகளைச் சந்தித்தன.
'அமெரிக்காவிற்கு அணுசக்திப் பொருட்கள் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை': டிரம்ப் கூற்றை மறுத்த ஈரான்
தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை ஈரான் வன்மையாக மறுத்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் லெபனான் செல்கிறாரா டிரம்ப்? அமெரிக்கா-ஈரான் போர் ஒப்பந்தம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், தான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது அணுக்கரு எரிபொருளை ஒப்படைக்கச் சம்மதம்: இஸ்லாமாபாத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஆறு வாரங்களாக நீடித்து வரும் போர் மற்றும் பதற்றமான சூழலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஈரான் தனது வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) ஒப்படைக்க சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் ஓமன் கடல் பகுதி வழியாக கப்பல்கள் செல்ல ஈரான் பரிந்துரை? அமைதி பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் போர்க்கால தடைகளை நீக்க, ஈரான் ஒரு புதிய வியூகத்தை முன்வைத்துள்ளது.
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை முடங்கியதன் காரணம் இதுதானா? 20 ஆண்டுகளுக்கு அணுசக்தி நடவடிக்கைகளை நிறுத்த கண்டிஷன்
பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள், தெஹ்ரானின் அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பான ஒரு முட்டுக்கட்டையில் முடிவடைந்தன.
'பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தான்': ஈரானை மிரட்டும் டிரம்ப்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மிரட்டலான தொனியை மாற்றிக்கொள்ளவில்லை.
அரசுக்குள்ளேயே ஒரு எட்டப்பன்! ஈரானில் நடந்த ரகசிய ஆபரேஷனை காட்டிக் கொடுத்தது யார்?
அமெரிக்க விமானப்படை வீரர் ஈரானில் இருந்து அதிரடியாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க அரசுக்குள்ளேயே ஒரு 'உளவு நபர்' (Mole) இருக்கலாம் என்ற அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஒரே ராத்திரியில் ஈரானே காலியாகும்!': ட்ரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்
ஈரான் மீதான தாக்குதலுக்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், "ஒரே இரவில் அந்த நாட்டை நிர்மூலமாக்க முடியும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது.
மூன்றே வார்த்தைகள்! ஈரானில் சிக்கிய அமெரிக்க வீரர் அனுப்பிய SOS செய்தியால் மீட்கப்பட்டது எப்படி?
ஈரானிய எல்லைக்குள் வீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தின் வீரர்களை மீட்பதற்காக நடத்தப்பட்ட அதிரடி ராணுவ நடவடிக்கை, உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தில் அடுத்த விக்கெட் காலி! அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி பதவி நீக்கம்; அதிரவைக்கும் பின்னணி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டியை (Pam Bondi) நேற்று (ஏப்ரல் 2) அதிரடியாகப் பதவி நீக்கம் செய்துள்ளார்.
"விரைவில் வெளியேறும் அமெரிக்கா": ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருகிறார் ட்ரம்ப்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வரும் பதற்றமான சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கா நிறைவு செய்யக்கூடும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
"அடுத்த இலக்கு கூகுள், மைக்ரோசாப்ட்": அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்
ஈரான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவின் முன்னணித் தொழில்நுட்ப மற்றும் தொழில் நிறுவனங்களைக் குறிவைக்கப்போவதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
போர் தீவிரமடைகிறதா? வெள்ளை மாளிகையின் மர்ம பதிவுகள் கவலையை தூண்டுகிறது
வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளில் தொடர்ச்சியான புதிரான வீடியோக்களையும் தெளிவற்ற படங்களையும் பதிவிட்டுள்ளது, இது வரவிருக்கும் அறிவிப்பு குறித்த யூகங்களைத் தூண்டியுள்ளது.
'aliens.gov' இணையதளத்தைப் பதிவு செய்த அமெரிக்கா; மர்மங்களை உடைக்கத் தயாராகும் டிரம்ப்
பல தசாப்தங்களாக திரைப்படங்களிலும் அறிவியல் புனைகதைகளிலும் மட்டுமே பேசப்பட்டு வந்த 'ஏலியன்கள்' குறித்த விவாதம், தற்போது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு நகர்ந்துள்ளது.
ஈரான் பள்ளி படுகொலையில் அமெரிக்க இராணுவத்தின் பங்கை பகிரங்கப்படுத்திய விசாரணை
பிப்ரவரி 28 அன்று ஈரானிய பெண்கள் பள்ளியின் மீது நடத்தப்பட்ட கொடிய வான்வழித் தாக்குதலை அமெரிக்க இராணுவம் நடத்தியிருக்கலாம் என்று தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புதிய 10% இறக்குமதி வரி அமல்: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ட்ரம்ப்பின் அடுத்தகட்ட அதிரடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த "வரையறுக்கப்படாத" இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டிரம்பின் அடுத்த அதிரடி! 10லிருந்து 15 சதவீதமாக உயர்ந்தது அமெரிக்க இறக்குமதி வரி! முழு விபரம் இதோ
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) அறிவித்துள்ளார்.
ஈரானை குறிவைக்கும் ட்ரம்ப்; இந்த வாரமே போர் தொடங்கக்கூடும் என பிரிட்டனுக்கு பறந்த எச்சரிக்கை
ஈரானின் அணுசக்தி மையங்கள் நிலத்தடியில் பதுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டின் மீது இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"நாங்கள் சேவகர்கள் அல்ல.. சமமாக நடத்துங்கள்!": டிரம்ப்-க்கு ராகுல் காந்தி காட்டமான பதிலடி
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அண்மையில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை சைலெண்டாக மாற்றியமைத்தது வெள்ளை மாளிகை; என்னென்ன மாற்றங்கள்?
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட்ட ஒரே நாளில், வெள்ளை மாளிகை அந்த அறிக்கையில் சில முக்கிய மாற்றங்களை ரகசியமாக மேற்கொண்டுள்ளது.
இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த fact sheet-ஐ வெளியிட்டது வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார்.
எப்ஸ்டீன் சர்ச்சையை மூடிமறைக்க, டிரம்ப் நிர்வாகம் UFO ரகசியங்களை வெளியிடபோகிறதாம்
ஏரியா 51 உட்பட அமெரிக்காவில் உள்ள ரகசிய UFO வசதிகள் பற்றிய தகவல்களை வெளியிட டிரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
மருந்துகளை குறைந்த விலையில் பெற புதிய 'TrumpRx' இணையதளத்தை அறிமுகப்படுத்தினார் அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் மருந்துப் பொருட்களின் விலையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் 'TrumpRx' என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார்.
டாவோஸுக்கு சென்ற டிரம்ப்பின் விமானத்தில் மின்சார கோளாறு; மீண்டும் தளத்திற்கே திரும்பியது
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன், செவ்வாய்க்கிழமை இரவு மிகுந்த எச்சரிக்கையுடன் மேரிலாந்தில் உள்ள கூட்டு தளமான ஆண்ட்ரூஸுக்கு திரும்பியது.
டிரம்ப்பிற்கு நோபல் பரிசு வழங்கிய விவகாரம்; அப்படி பதக்கத்தை மாற்றலாமா? நோபல் கமிட்டி பதில்
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், 2025-ஆம் ஆண்டின் நோபல் அமைதி வெற்றியாளருமான மரியா கொரினா மச்சாடோ, வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் தனது நோபல் பதக்கத்தை வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்
வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடி வரும் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வியாழக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார்.
வெனிசுலா எண்ணெய் விற்பனையை 'காலவரையின்றி' கட்டுப்படுத்தப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு
தடைசெய்யப்பட்ட வெனிசுலா எண்ணெய் விற்பனையை அமெரிக்கா "காலவரையின்றி" பொறுப்பேற்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மூன்றாம் உலக நாடுகளுக்கான குடியேற்றத்தை இடைநிறுத்திய டிரம்ப்; இந்தியாவும் இதில் அடக்கமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "மூன்றாம் உலக நாடுகள்" என்று அவர் அழைப்பவற்றிலிருந்து இடம்பெயர்வதை "நிரந்தரமாக நிறுத்த" அழைப்பு விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு எதிரொலி: ஆப்கானியர்களுக்கான குடிவரவு விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைப்பு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) நிர்வாகம் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 2 தேசிய காவல்படை வீரர்கள் கவலைக்கிடம்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்றிரவு (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தேசிய காவல்படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது அமெரிக்க செனட் சபை
அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட கால முடக்கத்தை சில நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவருவதற்காக, குறைந்தது எட்டு செனட் ஜனநாயக மையவாதிகளை கொண்ட இரு கட்சிக் குழு, செனட் குடியரசுக் கட்சித் தலைவர்களுடனும் வெள்ளை மாளிகையுடனும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்கா- இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன; இரு தலைவர்களும் நல்ல உறவில் இருக்கின்றனர்: வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே தொடர்ச்சியான மற்றும் நெருக்கமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
மோடிக்கு பாராட்டுகளும், ரஷ்ய எண்ணெய் குறித்த மறு வாதமும்: தீபாவளியை முன்னிட்டு டொனால்ட் டிரம்ப் சொன்னது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில், தனது நிர்வாகத்தில் உள்ள இந்திய-அமெரிக்க உறுப்பினர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தகவல்; சீனாவிற்கும் நெருக்கடி தரப்போகிறாராம்!
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம்; நோபல் குழு மீது அமெரிக்கா கடும் விமர்சனம்
2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சிச் செயற்பாட்டாளரான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நோபல் குழுவின் முடிவை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) கடுமையாக விமர்சித்துள்ளது.
அரசாங்க முடக்கம் தொடர்ந்தால் பெருமளவிலான பணிநீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை
பகுதி அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக காங்கிரஸ் ஜனநாயக கட்சியினருடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வெற்றிபெறவில்லை என்றால், கூட்டாட்சி ஊழியர்கள் பெருமளவில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அரசு ஊழியர்களை கொத்துக் கொத்தாக பணி நீக்கம் செய்ய தயாராகும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்?
அமெரிக்காவில் அடுத்த வாரம் அரசாங்கம் மூடப்படக்கூடிய சூழ்நிலையில், வெள்ளை மாளிகை கூட்டாட்சி நிறுவனங்களை ஒட்டுமொத்தப் பணிநீக்கங்களுக்குத் (Mass Firings) திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஐ.நா. சபையில் நடந்த சந்திப்பிற்கு பிறகு டிரம்ப் மீண்டும் பாக்., பிரதமரை சந்திக்கிறார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்திக்கவுள்ளார்.
விரைவில் செமிகண்டக்டர்கள் மீது 'மிகக் கணிசமான' கட்டணங்களை டிரம்ப் விதிக்க உள்ளார்
செமிகண்டக்டர் இறக்குமதிகள் மீது "மிக விரைவில்" வரிகளை விதிக்கும் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா எல்லாம் இல்லை.. இந்தியாவும் சீனாவும் தான் காரணம்: போர் நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யா அதிபர் புடின்
திங்களன்று தியான்ஜினில் நடைபெற்ற 25வது SCO தலைவர்கள் கவுன்சில் உச்சி மாநாட்டில், ரஷ்யா-உக்ரைன் போரை தீர்க்க இந்தியாவும் சீனாவும் மேற்கொண்ட முயற்சிகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டினார்.
"பிராமணர்கள் தான் லாபம் ஈட்டுகிறார்கள்": இந்தியா-ரஷ்யா எண்ணெய் உறவுகள் குறித்து டிரம்ப் உதவியாளரின் மற்றொரு வினோதமான கருத்து
ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவின் தனிப்பட்ட தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமை புதிய உச்சத்தை எட்டியது.
உக்ரைன்- ரஷ்யா போருக்கு இந்தியா தான் காரணமாம்: டிரம்பின் உதவியாளர் பிதற்றல்
ரஷ்யா-உக்ரைன் மோதலை "மோடியின் போர்" என்று வர்ணித்து, வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீது புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.
"இந்தியாவிற்கு ரஷ்ய எண்ணெய் தேவை என்பது முட்டாள்தனம்": டிரம்ப் ஆலோசகர் நவாரோ
உக்ரைன் போரில் இந்தியாவின் பங்கை வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்தார்.
ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கதான் இந்தியாவிற்கு அதிக வரிகள் விதித்தாராம் டிரம்ப், கூறுகிறது வெள்ளை மாளிகை
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவை மறைமுகமாக அழுத்தம் கொடுக்கவே இந்தியாவின் மீது அதிக வரிகளை விதித்தார் டொனால்ட் டிரம்ப் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்காவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஆப்பிள் திட்டம்
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான அதன் சமீபத்திய உறுதிமொழியின் ஒரு பகுதியாக, ஆப்பிள் அமெரிக்காவில் 100 பில்லியன் டாலர் கூடுதல் முதலீட்டை அறிவித்தது.