LOADING...
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 2 தேசிய காவல்படை வீரர்கள் கவலைக்கிடம்
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 2 தேசிய காவல்படை வீரர்கள் கவலைக்கிடம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2025
07:31 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்றிரவு (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தேசிய காவல்படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளை மாளிகையில் இருந்து இரண்டு தெருக்கள் தொலைவில், 17 மற்றும் ஐ தெருக்கள் சந்திப்புக்கு அருகே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வர்ஜீனியா தேசிய காவல்படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் மீது ஒரு நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். படுகாயமடைந்த இரண்டு வீரர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தின் போது அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லை.

கைது

கைது செய்யப்பட்டவர் ஆப்கானிஸ்தான் நாட்டவர்

பதில் தாக்குதல் நடத்திய மற்ற காவல்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை கைது செய்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பின்னர், 29 வயதான ஆப்கானிஸ்தான் நாட்டவரான ரஹ்மானுல்லா லகன்வால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 2021 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர் என்றும், அவரது சட்டப்பூர்வ அந்தஸ்து செப்டம்பரில் காலாவதியானது என்றும் ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நேரத்தில் அவர் ஆவணமற்றவராக இருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவத்தை அடுத்து, வெள்ளை மாளிகை மற்றும் கருவூலத் துறை அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.