இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல்
சிரியாவில் உள்ள தனது தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பதில் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக யூத அரசை எச்சரித்துள்ள ஈரான், அமெரிக்காவை ஒதுங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. இது குறித்து வெள்ளை மாளிகைக்கு எழுதிய ஒரு செய்தியில், ஈரான், "இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் வலையில் இழுக்கப்பட வேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளது" என்று ஈரானிய ஜனாதிபதியின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் முகமது ஜம்ஷிடி, எக்ஸ்-இல் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலாக, அமெரிக்க இலக்குகளை தாக்க வேண்டாம் என்று அமெரிக்கா ஈரானிடம் கேட்டுக் கொண்டது என்றும் ஜம்ஷிடி கூறினார். எனினும், ஈரான் அனுப்பியதாகக் கூறப்படும் செய்தி குறித்து அமெரிக்கா எந்தக் கருத்தும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.
தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா
அமெரிக்கா மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், இப்பகுதியில் இஸ்ரேலிய அல்லது அமெரிக்க இலக்குகளுக்கு எதிராக ஈரானிடம் இருந்து வரும் தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் CNN தெரிவித்துள்ளது. முன்னதாக டமாஸ்கஸில் திங்கட்கிழமை தாக்குதல் நடக்கும் என்று அமெரிக்கா அறிந்திருக்கவில்லை என்று ஈரானிடம் அமெரிக்கா தனது அதிருப்தியை தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் தனது சொந்த படைகள் மற்றும் தளங்கள் தாக்கப்படுவதை தடுக்க அமெரிக்கா முயற்சிப்பதாக அப்போது தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குதான் இஸ்ரேலுக்கு பதில் தாக்குதல் வழங்க போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. இருப்பினும், அது எப்போது நடக்கும், ஈரான் இஸ்ரேலை நேரடியாக தகுமா அல்லது லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்புல்லா போன்ற அதன் பினாமி குழுக்கள் மூலமாக தாக்க முயற்சிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.