இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா, இந்திய மற்றும் இந்திய-அமெரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அவரது நிர்வாகமும், நாட்டின் பல்வேறு பகுதிகளில், இந்திய மற்றும் இந்திய-அமெரிக்க மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உரையாற்றியுள்ளனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூலோபாய தகவல் தொடர்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, வன்முறைக்கு மன்னிப்பு இல்லை என்றார்.
"நிச்சயமாக இனம், பாலினம், மதம் அல்லது வேறு எந்த காரணிகளையும் அடிப்படையாகக் கொண்ட வன்முறைக்கு மன்னிப்பு இல்லை. இது அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று கிர்பி , இந்தியா மற்றும் இந்திய-அமெரிக்க சமூக மாணவர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் குறித்து கூறினார்.
அமெரிக்காவின் நடவடிக்கை
குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என உத்தரவாதம்
"அந்த வகையான தாக்குதல்களை முறியடிக்கவும், சீர்குலைக்கவும், அவற்றைக் கருத்தில் கொள்ளக்கூடிய எவருக்கும், தெளிவுபடுத்தவும், மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த, ஜனாதிபதியும், இந்த நிர்வாகமும் மிகவும் கடினமாக உழைத்து வருகின்றனர். இதற்கு காரணமானவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள்" என்று கிர்பி கூறினார்.
கடந்த சில வாரங்களில் குறைந்தது நான்கு இந்திய-அமெரிக்க மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விவேக் சைனி என்ற மாணவர், ஜனவரி மாதம், லித்தோனியாவில் தாக்குதலுக்குப் பிறகு உயிரிழந்தார்.
இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் பயின்ற இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி பிப்ரவரி மாதம் தாக்கப்பட்டார்.
சின்சினாட்டியில்இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஷ் ரேயாஸ் ரெட்டி பெனிகேரி, இந்த மாதம் ஓஹியோவில் இறந்து கிடந்தார்.