அதிபர் டிரம்பின் DOGE துறையிலிருந்து வெளியேறும் விவேக் ராமசுவாமி; இதுதான் காரணம்
செய்தி முன்னோட்டம்
விவேக் ராமசுவாமி அரசு செயல்திறன் துறையில் (DOGE) பணியாற்ற மாட்டார் என வெள்ளை மாளிகை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த நவம்பரில் பில்லியனர் தொழிலதிபர் எலான் மஸ்க்குடன் இணைந்து துறையை வழிநடத்த அவரைத் தேர்ந்தெடுத்தார்.
ஆனால் விவேக் ராமசாமி அதிலிருந்து பிரிந்து செல்ல முடிவு செய்தார்.
டிரம்பின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர் விவேக் ராமசாமி. அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுகிறார் என அறிந்ததும், அவர் போட்டியிலிருந்து பின்வாங்குவதாகவும், தன்னுடைய முழு ஆதரவை டிரம்பிற்கு வழங்குவதாகவும் கூறியது நினைவிருக்கலாம்.
அவரது இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கக்கூடும். எனினும் அதற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
காரணம்
வெளியான உண்மையான காரணம் இதுதான்
முன்னதாக 2024ல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி, அடுத்த ஆண்டு ஓஹியோவின் கவர்னராக போட்டியிடுவதற்கான திட்டத்தில் உள்ளார்.
அதனாலயே அவர் DOGE-இல் இருந்து விலகுகிறார் என அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அவரது பிரிவினை குறித்த அறிவிப்பு வெளியானது.
"அவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்கு போட்டியிட விரும்புகிறார், இன்று நாம் அறிவித்த அமைப்பு அடிப்படையில் அவர் DOGEக்கு வெளியே இருக்க வேண்டும். இன்று நாம் அறிவித்த அமைப்பு. கடந்த 2 மாதங்களாக அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நாங்கள் அவருக்கு மிகுந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.