டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: இஸ்ரேல், ரஷ்யா, சர்வாதிகாரம் என காரசாரமாக நடைபெற்ற விவாதம்
அமெரிக்கா முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் உடன், அமெரிக்காவின் துணை அதிபரும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் விவாதத்தில் ஈடுபாட்டார். டொனால்ட் டிரம்ப், தான் இன்னும் வெள்ளை மாளிகையில் இருந்திருந்தால், காசாவில் ஹமாஸுடன் இஸ்ரேலின் தற்போதைய போர் "ஒருபோதும் தொடங்கியிருக்காது" என்று கூறினார். இதுவே கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் இஸ்ரேல் ஒரு தேசமாக இல்லாமல் போய்விடும் என்று எச்சரித்த அவர், யூத அரசை அவர் வெறுக்கிறார் என்றும் கூறினார். "அவர் அதிபராக இருந்தால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் இருக்காது என்று நான் நம்புகிறேன்," என்று செவ்வாய்க்கிழமை இரவு பிலடெல்பியாவில் கமலா ஹாரிஸுடனான தனது முதல் ஜனாதிபதி விவாதத்தின் போது டிரம்ப் கூறினார்.
தீவிரவாதம் வளர உதவியதாக டிரம்ப் குற்றசாட்டு
டிரம்ப் மேலும்," கமலா ஹாரிஸ் அரபு மக்களை வெறுக்கிறார்" என்றும், தான் அதிபராக வெள்ளை மாளிகையில் இருந்தபோது மத்திய கிழக்கு ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தது என்றும் டிரம்ப் மேலும் குற்றம் சாட்டினார். "என்னுடைய ஆட்சியில் ஈரான் உடைபட்டு இருந்தது. இப்போது ஈரானிடம் 300 பில்லியன் டாலர்கள் உள்ளன. அப்போது ஈரானிடம் ஹமாஸ் அல்லது ஹிஸ்புல்லா அல்லது எந்த ஒரு பயங்கரவாத அமைப்பிற்கும் பணம் இல்லை," என்று அவர் கூறினார். இதற்கு பதிலளித்த கமலா ஹாரிஸ் டிரம்பின் கூற்றுக்களை மறுத்தார் மற்றும் அவர் "உண்மையில் இருந்து பிரித்து திசைதிருப்ப" முயற்சிப்பதாக கூறினார்.
கமலா ஹாரிஸின் பதில்
"இஸ்ரேலுக்கு தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு... எங்களுக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், இந்தப் போர் முடிவடைய வேண்டும், அது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். எங்களுக்கு ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் தேவை, பணயக்கைதிகளை வெளியேற்ற வேண்டும்." என்று கமலா ஹாரிஸ் பதிலளித்தார். குடியரசுக் கட்சியின் போட்டியாளரைத் தாக்கிய துணைத் தலைவர், "அவர் சர்வாதிகாரிகளைப் போற்றுகிறார் என்பதும், சர்வாதிகாரியாக இருக்க விரும்புவதும் அனைவரும் அறிந்ததே" என்றார். "இஸ்ரேலுக்கு தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு... எங்களுக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், இந்தப் போர் முடிவடைய வேண்டும், அது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். எங்களுக்கு ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் தேவை, பணயக்கைதிகளை வெளியேற்ற வேண்டும்." என்று கமலா ஹாரிஸ் பதிலளித்தார்.
உக்ரைன்-ரஷ்யா போரில் நிலைப்பாடு
உக்ரைன்-ரஷ்யா போரில் இதே நிலைப்பாட்டை எடுத்த டிரம்ப், தான் வெள்ளை மாளிகைக்கு திரும்பினால் 24 மணி நேரத்திற்குள் மோதலை "தீர்க்க" முடியும் என்று கூறினார். "போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் ... மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள். பைடனுக்கும் உங்களுக்கும் (துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸைக் குறிப்பிட்டு) நான் நேட்டோவுடன் கேட்டது போல் ஐரோப்பாவிடம் கேட்கும் தைரியம் இல்லை" என்று டிரம்ப் கூறினார். ரஷ்யாவின் ஜனாதிபதிகள் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைனின் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் நல்ல உறவைப் பேணி வருவதாகவும், "நான் அதிபராவதற்கு முன்பே அதை (போர்) தீர்த்து வைப்பேன்" என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.