LOADING...
மீண்டும் ஒருமுறை இந்தியா vs பாகிஸ்தான் பலப்பரீட்சை; 2026 உலகக்கோப்பை ஹாக்கி அட்டவணை வெளியானது; முழு விவரம்
2026 உலகக்கோப்பை ஹாக்கி அட்டவணை வெளியானது

மீண்டும் ஒருமுறை இந்தியா vs பாகிஸ்தான் பலப்பரீட்சை; 2026 உலகக்கோப்பை ஹாக்கி அட்டவணை வெளியானது; முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 19, 2026
11:05 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹாக்கி உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் இந்தத் தொடர் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான மோதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

ஆண்கள் அணி

ஆண்கள் அணி: சுதந்திர தினத்தில் தொடக்கம்

ஆண்கள் இந்திய ஹாக்கி அணி குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. தனது முதல் போட்டியை இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் தொடங்குகிறது. இந்திய நேரப்படி போட்டி அட்டவணை பின்வருமாறு:- ஆகஸ்ட் 15: இந்தியா vs வேல்ஸ் (மாலை 4:30 மணி) ஆகஸ்ட் 17:** இந்தியா vs இங்கிலாந்து (மாலை 6:30 மணி) ஆகஸ்ட் 19: இந்தியா vs பாகிஸ்தான் (மாலை 6:30 மணி) இந்த மூன்று லீக் போட்டிகளும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் உள்ள வாக்னர் மைதானத்தில் நடைபெறும்.

பெண்கள் அணி

பெண்கள் அணி அட்டவணை

இந்திய மகளிர் ஹாக்கி அணியும் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய நேரப்படி அவர்களின் போட்டிகள் விவரம் பின்வருமாறு:- ஆகஸ்ட் 16: இந்தியா vs சீனா (மாலை 4:30 மணி) ஆகஸ்ட் 18: இந்தியா vs தென்னாப்பிரிக்கா (மாலை 6:30 மணி) ஆகஸ்ட் 20: இந்தியா vs இங்கிலாந்து (மாலை 6:30 மணி)

Advertisement

தொடரின் வடிவம்

தொடரின் வடிவம் மற்றும் மைதானங்கள் விவரம்

மொத்தம் 16 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும். பெண்கள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆகஸ்ட் 29லும், ஆண்கள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆகஸ்ட் 30லும் நடைபெறும். பெண்கள் உலகக்கோப்பையின் நாக்-அவுட் போட்டிகள் ஆம்ஸ்டர்டாமிலும், ஆண்கள் உலகக்கோப்பையின் நாக்-அவுட் போட்டிகள் பெல்ஜியத்தின் வாவ்ரே நகரிலும் நடைபெறவுள்ளன. இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்களது பிரிவில் வலுவான நிலையில் உள்ளதால், நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement