இந்தியா vs பாகிஸ்தான்: செய்தி
இந்தியா -பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்படுமென அமெரிக்க ஆய்வு மையம் கணிப்பு
2026-ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மீண்டும் ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த 'கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ்' (CFR) எனும் புகழ்பெற்ற ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கிரிக்கெட்டில் மீண்டும் இறுதிப்போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான்: அண்டர்-19 ஆசியக் கோப்பையில் மோதல்
துபாயில் நடைபெற்ற அண்டர்-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஹாங்காங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானுக்கு எதிராக DLS முறையில் இந்தியா பரபரப்பு வெற்றி
ஹாங்காங் சிக்ஸர்ஸ் 2025 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில், மழை குறுக்கிட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் (DLS) முறைப்படி பாகிஸ்தானை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி பரபரப்பு வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நவம்பர் 16இல் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான்; ஆசிய கிரிக்கெட் ரைசிங் ஸ்டார்ஸ் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு
ஆசிய கோப்பை 2025 முடிவடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்பாடு செய்யும் மற்றொரு போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதவுள்ளன.
'இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு எனது சுங்க வரி மிரட்டல்களே காரணம்': மீண்டும் டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில், தான் விதித்த பெரிய சுங்க வரிகளுக்கான அச்சுறுத்தலே தீர்க்கமான காரணியாக இருந்தது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய கோப்பை முடிந்த ஒரே வாரத்தில் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தித் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுக் கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெற உள்ளது.
மொஹ்சின் நக்வி கோப்பை கொடுக்கலான என்ன! போட்டோஷாப் கோப்பையுடன் புகைப்படங்களை பதிவிட்ட இந்திய வீரர்கள்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்றபோது, பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) தலைவரான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை ஏற்க இந்திய வீரர்கள் மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
asia cup:வெற்றி கோப்பையை ஏற்க மறுத்த இந்தியா, தப்பி ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்
2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பில் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
டி20 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: திலக் வர்மா இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் பதிவு
துபாயில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 2025 ஆண்கள் டி20 ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது.
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டோஷூட்டை நிராகரித்தார் சூர்யகுமார் யாதவ்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்தியா vs பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் கலந்துகொள்ளவிருந்த பாரம்பரியப் போட்டோஷூட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கலந்துகொள்ள மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யகுமார் யாதவுக்கு போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவு
இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு பேசியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அவருடைய போட்டி ஊதியத்தில் 30% அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புகார் குறித்து சூர்யகுமார் யாதவ் ஐசிசி விசாரணையில் ஆஜராகி விளக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் முன் வியாழன் (செப்டம்பர் 25) அன்று நடைபெற்ற விசாரணையில் பங்கேற்றார்.
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக பிசிசிஐ ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐசிசிக்கு புகார்
துபாயில் நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டிக்குப் பிறகு, இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான பதட்டங்கள் களத்தை விட்டு புதிய பரிமாணம் எடுத்துள்ளன.
ஆசிய கோப்பை 2025: INDvsPAK சூப்பர் 4 டாஸ் நிகழ்வில் சல்மான் ஆகாவை கண்டுகொள்ளாத சூர்யகுமார் யாதவ்
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டிக்கு முன்னதாக, டாஸ் போடும் நிகழ்வின்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவை கண்டுகொள்ளாமல் தவிர்த்தார்.
ஆசிய கோப்பை 2025: INDvsPAK சூப்பர் 4 சுற்று போட்டியில் டாஸ் வென்றது இந்தியா; பாகிஸ்தான் முதலில் பேட்டிங்
ஆசிய கோப்பை 2025 இல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற உள்ள சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்தார் பாகிஸ்தான் கேப்டன்
ஆசிய கோப்பை 2025 இல் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அகா மீண்டும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025: சூப்பர் 4 சுற்று ஆட்டத்திலும் பாகிஸ்தானுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மாட்டார்களா? சூர்யகுமார் யாதவ் விளக்கம்
ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் நிலையில், அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காதது சரிதான்; சூர்யகுமார் யாதவிற்கு சவுரவ் கங்குலி ஆதரவு
ஆசிய கோப்பை 2025 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
'கைகுலுக்காம போய்ட்டாங்க'; ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய அணி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார்
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர், இந்திய வீரர்கள் தங்களுடன் கைகுலுக்க மறுத்ததாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
ஆசிய கோப்பை 2025 INDvsPAK: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்தியா முதலில் பந்துவீச்சு
இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2025 குழு நிலை ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறுகிறது.
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உச்ச நீதிமன்றம், ஆசிய கோப்பைத் தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வியாழக்கிழமை (செப்டம்பர் 11) மறுத்துவிட்டது.
வர்த்தக வரிகள் அதிகமாக விதிக்கப்படும் எனக்கூறி இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம்
மே மாதம், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த ஆயுதப் போரைத் தடுக்க தான் தலையிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலில் 7 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன: டிரம்ப் புதிய கூற்று
மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலின் போது ஏழு ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதோடு, போர் நிறுத்தம் தாம் நடத்திய மத்தியஸ்த முயற்சியின் விளைவாகத்தான் நடந்தது என கூறியுள்ளார்.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாட தடையில்லை; விளையாட்டு அமைச்சகம் உறுதி
பாகிஸ்தானுடன் இருதரப்பு விளையாட்டுப் போட்டிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும், அதேசமயம் பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேசப் போட்டிகளில் இரு நாடுகளின் அணிகள் விளையாடுவதற்கு தடை இல்லை என்றும் இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
10 வினாடிகளுக்கு ரூ.16 லட்சம்; இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2025 போட்டிக்கான விளம்பர விகிதங்கள் புதிய உச்சம்
ஆசிய கோப்பை 2025 இல் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் களத்தில் மட்டுமல்ல, விளம்பர வருவாயிலும் புதிய அளவுகோல்களை அமைத்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான எதிர்கால தாக்குதல் எப்படி இருக்கும்? பாகிஸ்தான் கருத்து
எதிர்காலத்தில் இராணுவ மோதல்கள் ஏற்பட்டால், இந்தியாவிற்குள் ஆழமாகத் தாக்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்குத் தடை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் இடையே ரத்து செய்யப்பட்ட போட்டியைக் கையாள்வதில் போட்டி ஏற்பாட்டாளர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி, எதிர்கால உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை 2025 அட்டவணை வெளியானது; செப்டம்பர் 14இல் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்
ஆசிய கோப்பை 2025க்கான அட்டவணை மற்றும் இடங்களை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
WCL 2025: அரையிறுதியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அணி மறுப்பு
ஜூலை 31 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள 2025 உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) அரையிறுதியில் பாகிஸ்தான் சாம்பியன்களை எதிர்கொள்ள இந்திய சாம்பியன்கள் அதிகாரப்பூர்வமாக மறுத்துவிட்டனர்.
இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை போட்டி "மனசாட்சிக்கு விரோதம்" என அசாதுதீன் ஒவைசி கண்டனம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதை எதிர்க்கும் எதிர்க்கட்சி குழுவில் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசியும் இணைந்துள்ளார்.
ஆசிய கோப்பை 2025இல் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் எப்போது? நாள் குறித்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்
2025 ஆசிய கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் மோதல் செப்டம்பர் 14 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
WCL 2025: இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் திட்டமிடப்பட்டிருந்த, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் (WCL) 2025 கிரிக்கெட் போட்டி அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்தாரா பிரதமர் மோடி? இந்தியா-பாக்., பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் உரையாடல்
பாகிஸ்தானுடனான உறவுகளில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு எதிரான இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மீண்டும் வலியுறுத்தினார்.
2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணை வெளியானது; அக்டோபர் 5இல் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்
செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள 2025 மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம்
போர் பதட்டத்தால் 12 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த அட்டாரி-வாகா எல்லையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வு, இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இணையத்தில் உலவும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் இளம் தலைமுறையை உளவியல் ரீதியாக பாதிக்கின்றன: ஆய்வு
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதட்டங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் 24x7 ஊடக சேனல்கள் வாயிலாக பரவி வரும் நிலையில், போர் பற்றி இதுவரை நேரடியாக எதிர்கொள்ளாத இளம் தலைமுறைக்கு இது ஒரு மனஅழுத்த மற்றும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது?
200 பக்கங்களுக்கு மேல் கொண்ட நீல நிற, limited edition அரசாங்க கையேடு தான் கடந்த வாரத்தில் நாடு முழுவதும் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு ஒரு கையேடாகப் பயன்பட்டுள்ளது.
தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
சனிக்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான், தனது மூன்று விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக கூறியது.
PSL போட்டிக்கு சில மணி நேரத்திற்கு முன்பு ராவல்பிண்டி மைதானத்தில் ட்ரோன் தாக்குதல்
புதன்கிழமை பெஷாவர் ஸல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் ட்ரோன் தாக்குதலால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது?
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான், இந்தியா மீது வான்வழி தாக்குதல் நடத்த முற்பட்டது.
இந்தியா vs பாகிஸ்தான்; யாருக்கு ராணுவ வல்லமை அதிகம்? விரிவான ஒப்பீடு
ஜம்மு காஷ்மீரில் 27 பொதுமக்கள் கொல்லப்பட்ட துயரகரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.