
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்தார் பாகிஸ்தான் கேப்டன்
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பை 2025 இல் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அகா மீண்டும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்துள்ளார். இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்த சர்ச்சையைத் தொடர்ந்து, இது சல்மான் ஊடகங்களைத் தவிர்ப்பது இரண்டாவது முறையாகும். இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐசிசி) வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. போட்டி நடுவர் ஆண்டி பைக்கிராப்ட் மீது பிசிபி அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தது.
அதிருப்தி
கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அதிருப்தி
கைக்குலுக்கல் சர்ச்சைக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் பைக்கிராப்ட் நடுவராக இருந்தால், போட்டியை புறக்கணிப்போம் என்றும் பிசிபி கூறியது. ஐசிசி இந்த கோரிக்கையை நிராகரித்ததால், பிசிபி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சல்மானின் தொடர்ச்சியான புறக்கணிப்பு ஒரு அமைதியான போராட்டம் அல்லது எதிர்ப்பின் செயல் என்று உள்விவகாரங்கள் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், விமர்சகர்கள், கேப்டன் தனது அணியின் மோசமான ஆட்டத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பி, ஊடகங்களின் கடினமான கேள்விகளை எதிர்கொள்வதைத் தவிர்க்கவே சர்ச்சையைப் பயன்படுத்துவதாக நம்புகின்றனர். பைக்கிராப்ட் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு நடுவராக நியமிக்கப்பட்டுள்ளதால், மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.