கிரிக்கெட் செய்திகள்
கிரிக்கெட்டின் தாயகத்தில் இந்திய மகளிரின் அபார சாதனை! லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை கதறவிட்ட ஹர்மன்பிரீத் படை
அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாமல் ஏமாற்றமளித்த இந்திய கிரிக்கெட் அணி, தற்பொழுது கிரிக்கெட்டின் தாயகமாகக் கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் மறக்க முடியாத உலக சாதனையைப் படைத்துள்ளது.
சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி! 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வந்தது! தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து பிளெமிங் விலகல்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாகவும், மிகவும் வெற்றிகரமாகவும் நீடித்த ஒரு பயிற்சியாளர் சகாப்தம் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகிறாரா ராகுல் டிராவிட்? முழு விபரம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் புகழ்பெற்ற ஜாம்பவானும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான உத்தேசப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியில் திடீர் மாற்றம்! காயம் காரணமாக இரு வீரர்கள் விலகல்! மாற்று வீரர்களை அறிவித்தது பிசிசிஐ
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர்களில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் வேளையில், காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்குப் பதிலாக மாற்று வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐசிசி டி20 தரவரிசை: 1,605 நாட்களுக்குப் பின் முதலிடத்தைப் பறிகொடுத்த இந்தியா! இங்கிலாந்து புதிய சாதனை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஆண்களுக்கான டி20 தரவரிசையில் கடந்த 1,605 நாட்களாக முதலிடத்தில் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் நடத்தி வந்த இந்திய அணி, தற்பொழுது தனது முதலிடத்தைப் பறிகொடுத்துள்ளது.
உலக கிரிக்கெட் சரித்திரம்: 15 வயது வைபவ் சூர்யவன்ஷி அல்ல, 12 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த உலக சாதனையாளர்
மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது 15 வயது 99 நாட்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி சச்சின் டெண்டுல்கரின் சாதனையைத் தகர்த்தார்.
INDvsENG T20: 14 ரன்களில் ஆட்டமிழந்தாலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறித்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி
இந்தியா vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் 2 ஆவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தும் வரலாற்று நிகழ்வு அரங்கேறியுள்ளது.
2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது நைட் ரைடர்ஸ்! லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிரம்மாண்ட மைதானத்தைத் திறந்தது
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் நைட் ரைடர்ஸ் குழுமம், சர்வதேச கிரிக்கெட் உள்கட்டமைப்பில் ஒரு உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் 2026: அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு! டி20 போட்டிகள் ரத்தா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக, இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
டி20 உலகக்கோப்பையில் ஏமாற்றம்: ஆனாலும் 2028 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
நடப்பு 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில், ஆஸ்திரேலிய அணியிடம் அடைந்த தோல்வியால் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.
அயர்லாந்திடம் ஒயிட்வாஷ் ஆகி இந்திய அணி தோல்வி! ரிஷப் பண்டின் மோசமான பட்டியலில் இணைந்தார் ஷ்ரேயாஸ் ஐயர்
இந்தியா vs அயர்லாந்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை லோர்கன் டக்கர் தலைமையிலான அயர்லாந்து கிரிக்கெட் அணி முழுமையாகக் கைப்பற்றி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தனது அதிகாரப்பூர்வ ஓய்வை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) அறிவித்துள்ளார்.
INDvsIRE 2ஆவது டி20: இரண்டு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு; வைபவ் சூர்யவன்ஷிக்கு மீண்டும் ஏமாற்றம்
இந்தியா மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) பெல்ஃபாஸ்ட் நகரில் தொடங்கியுள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை 2028: இலங்கை அணியின் வெற்றியால் நேரடியாகத் தகுதிபெற்ற 8 அணிகள்! அதிகாரப்பூர்வ விபரம் வெளியீடு
2028 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிப் போட்டிகளின் தற்போதைய நிலவரங்கள் இறுதி வடிவம் பெறத் தொடங்கியுள்ளன.
அயர்லாந்திற்கு எதிராக இந்தியா அதிர்ச்சி தோல்வி: விராட் கோலி, ஷுப்மன் கில்லின் மோசமான சாதனையை சமன் செய்த ஷ்ரேயாஸ் ஐயர்
அயர்லாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தங்களது முதல் டி20 சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து கிரிக்கெட் அணியிடம் 34 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! உள்ளே வந்த விராட் கோலி, பும்ரா! அதிர்ஷ்டம் இல்லாத ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 21) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
INDvsAFG 3வது ஒருநாள் போட்டி: ரோஹித் ஷர்மா-பிரசித் கிருஷ்ணா ஜோடி வரலாற்றுச் சாதனை
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோடி இணைந்து 94 ஆண்டுகால இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு தனித்துவமான உலகச் சாதனையைப் படைத்துள்ளனர்.
INDvsAFG 3வது ODI: ஒரு பந்து கூட வீசாமல் இந்தியா 5/0 என இன்னிங்ஸைத் தொடங்கியது ஏன்?
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி! இங்கிலாந்து தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா திடீர் விலகல்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, இங்கிலாந்து அணிக்கு எதிராக விரைவில் தொடங்கவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து முற்றிலும் விலகியுள்ளார்.
ஐபிஎல் 2027 தொடரில் யுவராஜ் சிங் புதிய அவதாரம்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம்?
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகம் அளிக்கும் வகையில், யுவராஜ் சிங் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் ரசிகர்களுக்குச் சர்ப்ரைஸ்! சீக்கிரமாகவே தொடங்கும் ஐபிஎல் 2027? பிசிசிஐ புதிய வியூகம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தை விறுவிறுப்பாக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் கால அட்டவணையில், வரும் 2027 ஆம் ஆண்டு முதல் முக்கிய மாற்றங்களை செய்ய இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் கேப்டனுடன் மீண்டும் கைகுலுக்க மறுத்த ஹர்மன்பிரீத் கவுர்! பின்னணி என்ன?
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக, மைதானத்தில் ஒரு பரபரப்பான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்! இங்கிலாந்து தொடரின் பாதியிலேயே சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்னார் கேன் வில்லியம்சன்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவருமான கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு பெற்றுள்ளார்.
2027 ஒருநாள் உலகக்கோப்பை : அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை தொடர் நடைபெறும் என அறிவிப்பு
2027 ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் என்று தற்காலிகமாக அட்டவணை வெளியாகியுள்ளது.
25 ஆண்டுகளில் இல்லாத புதிய சாதனை! அனுபவமில்லாத சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் கண்ட இந்திய அணி!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக முல்லன்பூரில் நடைபெற்று வரும் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தங்களின் சுழற்பந்து வீச்சில் ஒரு விசித்திரமான வரலாற்று மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் நீக்கமா அல்லது ஓய்வா? டி20 கேப்டன் சர்ச்சை குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவரின் புது ட்விஸ்ட்!
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் திடீரென நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக சனிக்கிழமை (ஜூன் 6) அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
லார்ட்ஸ் டெஸ்டில் 2வது நாளில் சரிந்த 17 விக்கெட்டுகள்! நியூசிலாந்து வெற்றிக்கு 218 ரன்கள் தேவை!
இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முற்றிலும் அதிரடியான விக்கெட் சரிவுகளுடன் அரங்கேறியுள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா சூர்யகுமார் யாதவ்? புதிய கேப்டன் ரேஸில் 2 வீரர்கள்!
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவை நீக்க பிசிசிஐ தேர்வுக்குழு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2026 பரிசுத்தொகை முழு விபரம்: சாம்பியன் ஆர்சிபி, ரன்னர் குஜராத் மற்றும் விருது வென்றவர்களுக்குக் கிடைத்த மொத்த பணம் எவ்வளவு?
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.
ஐபிஎல் 2026 பர்பிள் கேப்: புவனேஷ்வர் குமாரை முறியடித்து காகிசோ ரபாடா அசாத்திய சாதனை!
ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில், 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் காகிசோ ரபாடா இந்த சீசனின் பர்பிள் தொப்பியை வென்றுள்ளார்.
ஐபிஎல் 2026 சாம்பியன் ஆர்சிபி! அடுத்தடுத்து இருமுறை கோப்பை வென்று வரலாற்றுச் சாதனை!
ஐபிஎல் 2026 மெகா இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஐபிஎல் 2026 பைனல்: மைதானத்தில் நகம் வெட்டிய ஆசிஷ் நெஹ்ரா! வைரலாகும் குஜராத் கோச்சின் விசித்திர செயல்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 மெகா இறுதிப்போட்டியின் போது ஒரு சுவாரசியமான மற்றும் விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஐபிஎல் 2026 ஆரஞ்சு தொப்பியை வென்று 15 வயது வைபவ் சூர்யவன்ஷி அசாத்திய சாதனை! கில்லை முறியடித்து மாஸ்!
ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது பேட்டர் வைபவ் சூர்யவன்ஷி அதிகாரப்பூர்வமாக ஆரஞ்சு தொப்பியை வென்றார்.
இந்தியா ஏ அணியில் ருதுராஜ் கெய்க்வாட்! காயம் காரணமாக ரியான் பராக் நீக்கம்!
இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இந்தியா ஏ அணியில் ஒரு முக்கிய மாற்றத்தைப் பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2026 பரிசுத்தொகை விபரம்: சாம்பியன் மற்றும் ரன்னர்-அப் அணிகளுக்கு கிடைக்கும் மெகா தொகை!
ஐபிஎல் 2026 பிரம்மாண்ட இறுதிப்போட்டியில் மகுடம் சூடும் சாம்பியனுக்கு ₹20 கோடி பரிசுத்தொகையுடன் மதிப்புமிக்க தங்கப் பதக்கமும் வழங்கப்படும்.
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி? ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவிற்கு இடமில்லை என தகவல்
வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் பிசிசிஐ வழங்கியுள்ளது.
ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி மழையால் ரத்தானால் கோப்பை யாருக்கு? ஆர்சிபி - குஜராத் விதிமுறைகள் இதோ!
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபிஎல் 2026 இறுதிப்போட்டிக்கு பிசிசிஐ மாற்று நாளை (திங்கட்கிழமை, ஜூன் 1) ஒதுக்கியுள்ளது.
ஐபிஎல் 2026 மகுடம் யாருக்கு? அகமதாபாத்தில் ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நாளை மோதல்
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை நாளை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2026: சதம் தவறவிட்ட சோகத்தில் சூர்யவன்ஷி! டக்அவுட்டில் கேப்டன் ரியான் பராக் காரசார அறிவுரை - வைரல் வீடியோ
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 96 ரன்களில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
ஐபிஎல் 2026: ராஜஸ்தானை கதறவிட்டு 5வது சதம் விளாசிய ஷுப்மன் கில்! ஆட்டநாயகன் விருதுடன் குஜராத் கேப்டன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 குவாலிஃபையர் 2 போட்டியில் 215 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஐபிஎல் 2026: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குஜராத்! சாதித்து காட்டிய கில் - சாய் சுதர்சன் ஜோடி!
சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎல் 2026 குவாலிஃபையர் 2 முக்கியப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்த 215 ரன்கள் என்ற இமாலய இலக்கை அதிரடியாக முறியடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி மாஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் 2026: ஸ்மார்ட் சன்கிளாஸ் பயன்படுத்த பிசிசிஐ அதிரடி தடை! விதிகளை மீறினால் கடுமையான அபராதம்!
நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் மற்றும் முறைகேட்டு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் நோக்கில், பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு (ACU) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: முழுமையான பெண் நடுவர்கள் பட்டியல் வெளியீடு - 4 இந்தியப் பெண்களுக்குக் கிடைத்த பெருமை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), வரும் ஜூன் 12 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் தொடங்கவிருக்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடருக்கான 18 பேர் கொண்ட போட்டி அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2026: ஒரு ரன்னுக்கு 15.77 லட்சம்! மோசமான 'ROI' தந்த 10 வீரர்கள் யார்?
ஐபிஎல் 2026 தொடரில் பல முன்னணி நட்சத்திர வீரர்களைப் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய பிரான்சைஸ் அணிகள், அதற்கு இணையான ரன்களை அவர்கள் அடிக்காததால் முதலீட்டிற்கு ஏற்ற பலனை (ROI) பெறாமல் ஏமாற்றமடைந்துள்ளன.
ஐபிஎல் 2026 குவாலிஃபையர் 1: ஆர்சிபி - குஜராத் அணிகள் மோதல்; இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்?
நடப்பு 2026 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், நடக்கும் முதலாவது குவாலிஃபையர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2026 தொடரில் கே.எல்.ராகுல் விஸ்வரூபம்! 593 ரன்கள் குவித்து விராட் கோலி, ரோஹித் சர்மா பட்டியலில் இணைந்தார்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தங்களின் கடைசி லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஈடன் கார்டன் மைதானத்தில் குல்தீப் யாதவ் சுழல் சூறாவளி! ஆட்டநாயகன் விருது வென்று அசத்தல்
ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2026 லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2026: கடைசி லீக் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அதிரடி வெற்றி
ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2026 லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2026: ஷ்ரேயாஸ் ஐயர் சதம்; லக்னோவை வீழ்த்தி பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் 2026 தொடரின் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணி பிளே-ஆஃப் சுற்றுக்கான தங்களின் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.