ஐந்து நாள் இறக்கத்திற்குப் பின் மீண்டும் விலையேற்றம்; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
இந்த வார தொடக்கத்தின் முதலே தங்க விலை தொடர்ந்து இறங்கி வந்த நிலையில், சனிக்கிழமை (மார்ச் 7) அதிகரித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹90 அதிகரித்து ₹15,050 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹720 அதிகரித்து ₹1,20,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹98 அதிகரித்து ₹16,418 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹784 அதிகரித்து ₹131,344 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹40 அதிகரித்து ₹13,070 ஆகவும், ஒரு சவரன் ₹320 அதிகரித்து ₹1,04,560 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹290.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,90,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சமீப காலமாக தங்கம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் இருந்தாலும், சர்வதேச அரசியல் சூழல்களால் மீண்டும் நிலையற்ற தன்மை ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.