LOADING...
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: அகமதாபாத் ஆடுகளம் யாருக்குச் சாதகம்? இந்தியா - நியூசிலாந்து வியூகம்
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான அகமதாபாத் ஆடுகள விவரங்கள்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: அகமதாபாத் ஆடுகளம் யாருக்குச் சாதகம்? இந்தியா - நியூசிலாந்து வியூகம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 07, 2026
09:23 am

செய்தி முன்னோட்டம்

டி20 உலகக்கோப்பை 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) இரவு 7 மணிக்கு நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் மற்ற இந்திய மைதானங்களிலிருந்து மாறுபட்டது. இங்கு சிவப்பு மண், கருப்பு மண் மற்றும் இரண்டும் கலந்த கலப்பு மண் என மூன்று வகையான ஆடுகளங்கள் உள்ளன. கருப்பு மண் ஆடுகளங்கள் மெதுவாகவும், பந்து திரும்புவதற்கும் வாய்ப்பளிக்கும். ஆனால் சிவப்பு மண் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கூடுதல் பவுன்ஸ் மற்றும் வேகம் அளிக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டிக்குத் தயாராகும் 'ஹைப்ரிட்' பிட்ச்

இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதும் இறுதிப்போட்டிக்கு சிவப்பு மற்றும் கருப்பு மண் கலந்த கலப்பு மண் ஆடுகளம் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பேட்டர்களுக்குச் சாதகமான பவுன்ஸ் மற்றும் வேகத்தை அளிக்கும் அதே வேளையில், போட்டி செல்லச் செல்ல பந்து சற்று நின்று வரவும் வாய்ப்புள்ளது. இந்தத் தொடரின் தொடக்கத்தில் கனடா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதிய ஆட்டத்தில் இதே போன்ற ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்கா 213 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இறுதிப்போட்டி அதிக ரன்கள் எடுக்கப்படும் ஆட்டமாக இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

பலம்

இந்திய அணியின் பந்துவீச்சு பலம்

இந்த ஆடுகளத்தில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரும் பலமாக இருக்கும். குறிப்பாக அகமதாபாத்தின் விளக்கு வெளிச்சத்தில் புதிய பந்து ஸ்விங் ஆகும் பட்சத்தில், ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த பும்ரா திட்டமிடுவார். ஸ்பின்னைப் பொறுத்தவரை வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் நடுப்பகுதிகளில் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

நியூசிலாந்து

நியூசிலாந்தின் சவால்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, மேட் ஹென்றி மற்றும் லாக்கி ஃபெர்குசன் ஆகியோர் பவுன்ஸ் நிறைந்த ஆடுகளங்களில் ஆபத்தானவர்கள். மேலும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான ஸ்பின் கூட்டணி, ஆடுகளம் சற்று மெதுவாகும் பட்சத்தில் இந்திய பேட்டர்களுக்குச் சவால் அளிக்கக் காத்திருக்கின்றனர். அரையிறுதியில் சஞ்சு சாம்சன் விளாசிய 89 ரன்கள் மற்றும் நியூசிலாந்தின் ஃபின் ஆலன் ஆடிய அதிரடி ஆட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இறுதிப்போட்டி ஒரு த்ரில்லர் போட்டியாக நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement