LOADING...
டெஹ்ரான் வான்பரப்பில் தீப்பிழம்புகள்! மெஹ்ராபாத் விமான நிலையம் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் பற்றி எரியும் டெஹ்ரான் விமான நிலையம்

டெஹ்ரான் வான்பரப்பில் தீப்பிழம்புகள்! மெஹ்ராபாத் விமான நிலையம் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 07, 2026
09:50 am

செய்தி முன்னோட்டம்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே மார்ச் 7 அதிகாலையில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்தன. இஸ்ரேல் நடத்திய மிகப்பரந்த வான்வழித் தாக்குதலில் விமான நிலையத்தின் ஒரு பகுதி மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வணிக ரீதியிலான விமானங்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட கரும்புகை பல கிலோமீட்டர் தூரத்திற்குத் தெரிந்தது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

போரின் தீவிரம்

போரின் தீவிரம் மற்றும் உயிரிழப்புகள்

கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்தப் போரில், இதுவே மிக மோசமான இரவு என்று டெஹ்ரான் மக்கள் விவரிக்கின்றனர். இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் அரசு சார்ந்த இடங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து 150-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது. போரின் தொடக்கத்திலிருந்து இதுவரை ஈரானில் 1,300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை

டொனால்ட் டிரம்பின் சரணாகதி எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் இனி எந்தவித ஒப்பந்தமும் செய்ய முடியாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே தீர்வு என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானை மீண்டும் சிறந்த நாடாக்குவோம் (MIGA) என்ற முழக்கத்துடன், ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அமெரிக்கா முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு ஈரானின் ஐநா தூதர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

Advertisement

பாதிப்புகள்

பிராந்தியப் பாதிப்புகள்

இந்தப் போர் ஈரான் மற்றும் இஸ்ரேல் எல்லையைத் தாண்டி வளைகுடா நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. சவூதி அரேபியாவின் ரியாத் அருகே உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் ஏவிய ஏவுகணையைச் சவூதி இடைமறித்து அழித்தது. போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 92 டாலரைத் தாண்டியுள்ளது. உலகெங்கிலும் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

Advertisement