Loading...
2027-இல் களமிறங்கும் சீன பறக்கும் கார்: XPeng நிறுவனத்தின் அறிவிப்பு
2027-இல் களமிறங்கும் சீன பறக்கும் கார்

2027-இல் களமிறங்கும் சீன பறக்கும் கார்: XPeng நிறுவனத்தின் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2026
07:08 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவை சேர்ந்த பிரபல பறக்கும் கார் தயாரிப்பு நிறுவனமான XPeng, தனது புதிய பறக்கும் காரை வரும் 2027-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சந்தையில் அறிமுகம் செய்ய தீவிரமாகத் தயாராகி வருகிறது. சுமார் பத்தாண்டு கால தீவிர வளர்ச்சிக்கு பிறகு, இந்த இரு இருக்கைகள் கொண்ட மாதிரி வாகனம் கிராமப்புறங்களில் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காகவும், அவசர கால சேவைகளுக்காகவும் பயன்படும் என இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெலி ஜாவோ தெரிவித்துள்ளார். இந்த எதிர்கால வாகனத்திற்குச் சீனாவின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

வாகனத்தின் வடிவமைப்பு & சிறப்பம்சங்கள்

Fiat 500 காரின் அளவே கொண்ட இந்த சிறிய வாகனம், பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

இது ட்ரோன் போன்ற ஆறு பேட்டரியில் இயங்கும் ப்ராப்பெல்லர்கள் மூலம் வானத்தில் உயர்த்தப்படுகிறது. எளிய ஜாய்ஸ்டிக் மூலம் இதை எளிதாக இயக்கலாம்.

திட்டமிடப்பட்ட இலக்கை நோக்கி இந்த வாகனம் தானாகவே பறக்கும் திறன் கொண்டது.

ஒரு பயிற்சி பெற்ற விமானியான ஜாவோ கூறுகையில், இந்த வாகனத்தை இயக்க எவருக்கும் வெறும் ஐந்தே நிமிடங்களில் கற்றுக்கொடுத்துவிட முடியும்.

மாற்றம்

திரைப்படங்களைப் போன்ற வியப்பூட்டும் மாற்றம்

இந்த எக்ஸ்பெங் பறக்கும் காரின் மிக முக்கிய ஹைலைட் அதன் அமைப்பு முறை.

இந்த வாகனம் ஃபோர்டு டிரான்சிட் அளவிலான 6 சக்கர வேனின் பின்பகுதியில் இருந்து டிரான்ஸ்பார்மர்ஸ் திரைப்படங்களை போல விரிவடைந்து வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹாரி பாட்டர் கதைகளில் வரும் பறக்கும் உயிரினங்கள் மற்றும் ஸ்பைடர்மேன் காமிக்குகளில் வரும் கிரீன் கோப்லினின் பறக்கும் ஸ்கேட்ச்போர்டு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டே இந்த வடிவமைப்பை உருவாக்கியதாக ஜாவோ தெரிவித்துள்ளார்.

இந்த பறக்கும் காரானது ஆரம்பத்தில் சாகச பிரியர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

எனினும், இதன் பயன்பாடு முதற்கட்டமாக சீனாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பூங்கா பகுதிகள் மற்றும் கடினமான இடங்களை எளிதில் சென்றடைய வேண்டிய அவசர கால சேவைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT