ஹர்திக் பாண்டியா விலகல்; மும்பை இந்தியன்ஸ் அடுத்த கேப்டன் யார்?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வந்த ஹர்திக் பாண்டியா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேட் முறையில் மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மும்பை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் அணியிடமிருந்து பெற்றுக்கொண்டு ஹர்திக் பாண்டியாவை விடுவித்துள்ள மும்பை நிர்வாகம், அடுத்த கேப்டனைத் தேர்வு செய்வதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமான திலக் வர்மா ஆகிய இருவரது பெயர்களும் முன்னணியில் உள்ளன.
ரசிகர்களின் ஆதரவு
ரோஹித் ஷர்மாவின் பலம்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று தந்தவர் ரோஹித் ஷர்மா.
கடந்த 2024 சீசனுக்கு முன்பாக அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது ரசிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அணி புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
தற்போது இந்திய அணிக்கு ஐசிசி கோப்பைகளை வென்று தந்துள்ள ரோஹித் ஷர்மா, அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கிரன் பொல்லார்டுடன் மிக நெருக்கமான நட்பையும் புரிதலையும் கொண்டவர்.
ரசிகர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், வர்த்தக ரீதியான மதிப்பைப் பெருக்கவும் ரோஹித் ஷர்மாவை மீண்டும் கேப்டனாக நியமிப்பதே சிறந்த உடனடித் தேர்வாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
எதிர்கால நம்பிக்கை
திலக் வர்மாவுக்கு வாய்ப்பா?
இந்திய டி20 அணியின் துணை கேப்டனாகப் பொறுப்பு வகிக்கும் இளம் வீரர் திலக் வர்மா, அழுத்தமான தருணங்களில் போட்டிகளை வென்று தரும் ஆற்றல் கொண்டவராக உருவெடுத்துள்ளார்.
ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 20/3 என இந்தியா தத்தளித்த போது, ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் விளாசி வெற்றியைத் தேடித்தந்த பெருமை உண்டு.
துலீப்கோப்பையில் தெற்கு மண்டல அணியை வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றதுடன், இந்தியா 'ஏ' அணிகளையும் திறம்பட வழிநடத்தியுள்ளார்.
நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் மும்பை அணி இளம் தலைவரை உருவாக்க நினைத்தால் திலக் வர்மா முதன்மைத் தேர்வாக இருப்பார் என்றாலும், அனுபவம், உத்தி மற்றும் ஆளுமை அடிப்படையில் தற்போதைக்கு ரோஹித் ஷர்மாவே கேப்டன் பந்தயத்தில் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.