Loading...
சல்மான் கானின் ஆக்‌ஷன் அவதாரம்: கல்வான் மோதலை மையமாக கொண்ட 'மாத்ருபூமி' டிரெய்லர் வெளியானது
சல்மான் கானின் கல்வான் போர் பின்னணி திரைப்பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சல்மான் கானின் ஆக்‌ஷன் அவதாரம்: கல்வான் மோதலை மையமாக கொண்ட 'மாத்ருபூமி' டிரெய்லர் வெளியானது

எழுதியவர் Vasuki
Nov 11, 2026
06:55 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய-சீன எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் 'மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அபூர்வா லக்கியா இயக்கத்தில், சல்மான் கான் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம், ராணுவ வீரர்களின் வீரத்தையும் போரினால் இரு தரப்பு குடும்பங்களுக்கும் ஏற்படும் வலிகளையும் பிரதிபலிக்கும் வகையில் உணர்வுபூர்வமான போர்க் கால படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது

கல்வான் மோதல்

டிசம்பர் 4 ரிலீஸ்

2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த 16-வது பீகார் ரெஜிமெண்ட் தளபதி கர்னல் பி. சந்தோஷ் பாபுவின் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இதில் கர்னல் சந்தோஷ் பாபுவாக சல்மான் கானும், கதாநாயகியாக சித்ராங்கதா சிங்கும் நடித்துள்ளனர்.

முதலில் 'பேட்டில் ஆஃப் கல்வான்' எனப் பெயரிடப்பட்ட இப்படம், தற்போது 'மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்' எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இதன் டிரெய்லரை சல்மான் கான் வெளியிட்டுள்ள நிலையில், திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT