LOADING...
வான்கடே ராசியில்லாத மைதானமா? 2023 ஐத் தவிர்த்து அரையிறுதிகளில் இந்தியாவை சோதித்த வரலாறு
வான்கடே மைதானங்களில் 2023 ஐத் தவிர்த்து அரையிறுதிகளில் இந்தியாவை சோதித்த வரலாறு

வான்கடே ராசியில்லாத மைதானமா? 2023 ஐத் தவிர்த்து அரையிறுதிகளில் இந்தியாவை சோதித்த வரலாறு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 05, 2026
11:19 am

செய்தி முன்னோட்டம்

மும்பையில் உள்ள வான்கடே மைதானம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் வெற்றியைக் கொடுத்த இடமாகும். இருப்பினும், உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிகளைப் பொறுத்தவரை, இந்த மைதானம் இந்திய கிரிக்கெட் அணிக்கு வரலாற்று ரீதியாக சாதகமாக இருந்ததில்லை. 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா பெற்ற அபார வெற்றியைத் தவிர்த்துப் பார்த்தால், வான்கடே மைதானம் இந்தியாவிற்குப் பெரும் ஏமாற்றங்களையே தந்துள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

1987 ஒருநாள் உலகக்கோப்பை

1987 உலகக்கோப்பை அரையிறுதி: இங்கிலாந்திடம் அதிர்ச்சித் தோல்வி

1987 ஆம் ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனாகக் களம் கண்ட இந்தியா, இங்கிலாந்தை வான்கடே மைதானத்தில் எதிர்கொண்டது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்ணயித்த 255 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்தியா, 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கிரஹாம் கூச்சின் அபாரமான சதம் மற்றும் இந்திய ஸ்பின்னர்களை அவர் கையாண்ட விதம் இந்திய ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சொந்த மண்ணில் இறுதிப்போட்டிக்குச் செல்லும் கனவு தகர்ந்தது.

2016 டி20 உலகக்கோப்பை

2016 டி20 உலகக்கோப்பை அரையிறுதி: வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி

குறுகிய வடிவிலான உலகக்கோப்பையிலும் வான்கடே மைதானம் இந்தியாவிற்குச் சவாலாகவே இருந்தது. 2016 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. விராட் கோலியின் அதிரடியால் இந்தியா 192 ரன்கள் குவித்த போதிலும், சிம்மன்ஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பனிப்பொழிவு காரணமாகப் பந்துவீச்சாளர்களுக்குப் பந்து நழுவியதும், நோ-பால் வீசியதும் இந்தியாவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

Advertisement

2023 ஒருநாள் உலகக்கோப்பை

2023: வரலாற்றை மாற்றியெழுதிய இந்தியா

பல ஆண்டுகால கசப்பான நினைவுகளுக்குப் பிறகு, 2023 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை இதே வான்கடே மைதானத்தில் இந்தியா எதிர்கொண்டது. முகமது ஷாமியின் 7 விக்கெட் வேட்டை மற்றும் விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயரின் சதங்களால் இந்தியா இந்த முறை வெற்றியை வசப்படுத்தியது. இந்த வெற்றி வான்கடே மைதானம் குறித்த 'ராசியில்லாத மைதானம்' என்ற பிம்பத்தை உடைத்தெறிந்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

Advertisement

2011 ஒருநாள் உலகக்கோப்பை

2011 உலகக்கோப்பை: மகுடம் சூடிய தருணம்

அரையிறுதிச் சோகங்களைத் தாண்டி, வான்கடே மைதானம் இந்தியாவிற்கு வழங்கிய மிகப்பெரிய பரிசு 2011 ஒருநாள் உலகக்கோப்பை வெற்றியாகும். தோனியின் அந்த ஹெலிகாப்டர் ஷாட் மூலம் இந்தியா 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது. இலங்கை நிர்ணயித்த 275 ரன்கள் இலக்கை கவுதம் கம்பீர் மற்றும் தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா எட்டியது. சச்சினின் கடைசி உலகக்கோப்பையை அவர் பிறந்த மண்ணிலேயே வென்று, அவரை வீரர்கள் தோளில் சுமந்து மைதானத்தைச் சுற்றி வந்த காட்சி இந்திய விளையாட்டு வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தருணமாகும்.

Advertisement