LOADING...
கோப்பையைத் தக்கவைக்குமா இந்தியா? டி20 உலகக்கோப்பை 2026 திருவிழா ஆரம்பம்; இந்திய அணியின் முழு அட்டவணை மற்றும் நேரலை விவரங்கள்
டி20 உலகக்கோப்பை 2026இல் இந்திய அணியின் முழு ஆட்ட விவரங்கள்

கோப்பையைத் தக்கவைக்குமா இந்தியா? டி20 உலகக்கோப்பை 2026 திருவிழா ஆரம்பம்; இந்திய அணியின் முழு அட்டவணை மற்றும் நேரலை விவரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 06, 2026
11:48 am

செய்தி முன்னோட்டம்

2024 இல் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, தற்போது நடப்புச் சாம்பியனாக 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் களமிறங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த 10 வது டி20 உலகக்கோப்பைத் தொடர் நாளை (பிப்ரவரி 7, 2026) தொடங்குகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 4-1 என வென்ற உற்சாகத்துடன் இத்தொடரை எதிர்கொள்கிறது.

போட்டி அட்டவணை

இந்திய அணியின் போட்டி அட்டவணை (குரூப் ஏ)

இந்தியா குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் அனைத்து லீக் போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு தொடங்கும். போட்டி அட்டவணை பின்வருமாறு:- பிப்ரவரி 07 (சனி) - vs அமெரிக்கா - வான்கடே மைதானம், மும்பை பிப்ரவரி 12 (வியாழன்) - vs நமீபியா - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி பிப்ரவரி 15 (ஞாயிறு) - vs பாகிஸ்தான் - ஆர்.பிரேமதாசா மைதானம், கொழும்பு பிப்ரவரி 18 (புதன்) - vs நெதர்லாந்து - நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத் பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவுடன் நடக்கவிருந்த போட்டியைப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

பட்டியல்

இந்திய அணி வீரர்கள் பட்டியல்

ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஓய்விற்குப் பிறகு, இளம் வீரர்களைக் கொண்ட வலுவான அணியைச் சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார்: பேட்டர்கள்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங். விக்கெட் கீப்பர்கள்: சஞ்சு சாம்சன், இஷான் கிஷன். ஆல் ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே. பந்துவீச்சாளர்கள்: ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ்.

Advertisement

ஒளிபரப்பு

நேரலை மற்றும் ஒளிபரப்பு விவரங்கள்

இந்தியாவில் இந்த உலகக்கோப்பைத் தொடரை நீங்கள் நேரலையாகக் காணலாம்: தொலைக்காட்சி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Star Sports Network). ஆன்லைன்/மொபைல்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலி மற்றும் இணையதளம். மும்பையில் நடைபெறும் தொடக்க விழாவில் பாட்ஷா, நோரா ஃபதேஹி மற்றும் சிவமணி போன்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மார்ச் 8 ஆம் தேதி அகமதாபாத்தில் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி நடைபெறும்.

Advertisement