LOADING...
அகமதாபாத்தில் மீண்டும் ஒரு அக்னிப் பரீட்சை! இந்தியா vs தென்னாப்பிரிக்கா புள்ளிவிவரங்கள் முதல் உத்தேச அணி வரை... முழு ரிப்போர்ட்
டி20 உலகக்கோப்பை 2026 சூப்பர் 8 சுற்றில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 மோதல்

அகமதாபாத்தில் மீண்டும் ஒரு அக்னிப் பரீட்சை! இந்தியா vs தென்னாப்பிரிக்கா புள்ளிவிவரங்கள் முதல் உத்தேச அணி வரை... முழு ரிப்போர்ட்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 21, 2026
04:31 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மோதல் எப்போதும் விறுவிறுப்பாகவே இருந்துள்ளது. இதுவரை இரு அணிகளும் 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 21 வெற்றிகளும், தென்னாப்பிரிக்கா 13 வெற்றிகளும் பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றைப் பொறுத்தவரை, இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5 முறையும், தென்னாப்பிரிக்கா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட் சொல்வது என்ன?

இந்த முக்கியமான சூப்பர் 8 போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தின் பிட்ச் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமானது. பந்து நன்றாக பேட்டிற்கு வரும் என்பதால் ரன் குவிப்பு அதிகமாக இருக்கும். ஆரம்ப ஓவர்களில் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவிற்கு ஸ்விங் மற்றும் பவுன்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. இரவு நேரத்தில் போட்டி நடப்பதால், இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்கக்கூடும். இது பந்துவீச்சாளர்களுக்குப் பந்தைப் பிடிக்க சிரமத்தைத் தரும். எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசவே விரும்பும்.

வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை சொல்வது என்ன?

பிப்ரவரி 22, 2026 அன்று அகமதாபாத்தில் வானிலை சீராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை சுமார் 27°C முதல் 34°C வரை இருக்கும். போட்டிக்கு மழையால் எவ்வித இடையூறும் இருக்காது. தெளிவான வானம் நிலவும் என்பதால் ரசிகர்கள் முழுமையான ஆட்டத்தை ரசிக்கலாம்.

Advertisement

விளையாடும் லெவன்

உத்தேச விளையாடும் லெவன்

இந்திய கிரிக்கெட் அணி: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரீத் பும்ரா. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரையான் ரிக்கெல்டன், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்கியா, லுங்கி என்கிடி.

Advertisement