LOADING...
மைதானத்தில் ரன் மழை பொழிந்த பேட்டர்கள்! 2024 டி20 உலகக்கோப்பையை அதிரவைத்த 4 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான்
டி20 உலகக்கோப்பை 2024யில் அதிக ரன்கள் குவித்த டாப் 4 பேட்ஸ்மேன்கள்

மைதானத்தில் ரன் மழை பொழிந்த பேட்டர்கள்! 2024 டி20 உலகக்கோப்பையை அதிரவைத்த 4 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 02, 2026
07:58 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வம் உச்சத்தை எட்டியுள்ளது. 2007 க்குப் பிறகு 2024 இல் இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. அந்தத் தொடரில் பேட்டிங்கில் மிரட்டிய முன்னணி வீரர்களின் புள்ளிவிவரங்களை இங்கே காண்போம்.

#4

குயிண்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா)

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தாலும், அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்டன் டி காக் சிறப்பான பங்களிப்பை வழங்கினார். அவர் டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 243 ரன்கள் எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 27.00 மற்றும் ஸ்டிரைக் ரேட் 146.06 ஆகும். இத்தொடரில் 2 அரைசதங்களை அடித்தார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 76 ஆகும்.

#3

டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறினாலும், அந்த அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடினார். அவர் 7 இன்னிங்ஸ்களில் 255 ரன்கள் குவித்து பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார். அவரது பேட்டிங் சராசரி 42.50 மற்றும் ஸ்டிரைக் ரேட் 158.38 ஆகும். 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் 2 அரைசதங்களுடன் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். பவர்பிளே ஓவர்களில் இவர் காட்டிய அதிரடி எதிரணிகளை மிரள வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

#2

ரோஹித் ஷர்மா (இந்தியா)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டி அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஒவ்வொரு போட்டியிலும் முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை விளாசுவதில் குறியாக இருந்தார். இவர் 8 இன்னிங்ஸ்களில் 257 ரன்கள் எடுத்தார். இவரது பேட்டிங் சராசரி 36.71 மற்றும் ஸ்டிரைக் ரேட் 156.70 ஆகும். குறிப்பாக, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் விளாசிய 92 ரன்கள் இத்தொடரின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Advertisement

#1

ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்)

2024 டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் முதலிடம் பிடித்தார். இவரது அதிரடியால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இவர் 8 போட்டிகளில் விளையாடி 281 ரன்கள் குவித்தார். இவரது பேட்டிங் சராசரி 35.12 மற்றும் ஸ்டிரைக் ரேட் 124.33 ஆகும். இத்தொடரில் 3 அரைசதங்களை விளாசினார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 80 ஆகும்.

Advertisement