LOADING...
டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டி: இந்தியா vs நியூசிலாந்து மோதலில் நடுவர்கள் யார்? முழு விவரம்
டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டிக்கான நடுவர்கள்

டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டி: இந்தியா vs நியூசிலாந்து மோதலில் நடுவர்கள் யார்? முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 06, 2026
06:48 pm

செய்தி முன்னோட்டம்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான நடுவர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் அலெக்ஸ் வார்ஃப் ஆகியோர் கள நடுவர்களாக செயல்படுவார்கள். கூடுதல் விவரங்கள் இங்கே:-

அனுபவ நடுவர்

அனுபவமும் அறிமுகமும்

ரிச்சர்ட் இல்லிங்வொர்த்: இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நடுவராகப் பணியாற்றுகிறார். 2024 இல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றபோது இவரே நடுவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அலெக்ஸ் வார்ஃப்: முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான இவர், தனது முதல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நடுவராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மோதிய அரையிறுதிப் போட்டியிலும் நடுவர்களாக இருந்தனர்.

அதிகாரிகள்

பிற அதிகாரிகள் விவரம்

மூன்றாவது நடுவர்: அல்லாஹுதீன் பலேக்கர். நான்காவது நடுவர்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக். போட்டி நடுவர்: ஆண்டி பைக்ராஃப்ட்.

Advertisement

சாம்பியன் பட்டம்

சரித்திரம் படைக்குமா இந்தியா?

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, சொந்த மண்ணில் கோப்பையை வென்று, தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையைப் படைக்கக் காத்திருக்கிறது. அதேசமயம், அரையிறுதியில் 33 பந்துகளில் சதம் விளாசிய ஃபின் ஆலன் தலைமையிலான நியூசிலாந்து அணி, தனது முதல் டி20 உலகக்கோப்பையை வெல்லத் துடிக்கிறது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான அந்த அணி இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement