'வதந்திகளுக்கு மேலாக..' த்ரிஷாவுடன் விஜய் இருக்கும்போதே மெய்க்காப்பாளர் போட்ட மர்மமான பதிவு! பின்னர் டெலீட் செய்ததன் பின்னணி
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், இவர்கள் இருவரும் பொது நிகழ்ச்சியில் ஒன்றாகத் தோன்றியது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெய்க்காப்பாளர்
மெய்க்காப்பாளரின் மர்மமான பதிவு
இந்த சூழ்நிலையில், விஜயின் நீண்ட கால மெய்க்காப்பாளர் அருண் சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மர்மமான பதிவைப் பகிர்ந்து, பின்னர் அதனை நீக்கியுள்ளார். "அனைத்து வதந்திகளுக்கும் மேலாக உயர வேண்டிய நேரம் இது" (Time to rise above all the rumors) என்று அவர் பதிவிட்டிருந்தார். இப்பதிவு விஜய் மற்றும் த்ரிஷா குறித்த வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இருந்ததாக ரசிகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவு நீக்கப்பட்டது கூடுதல் கேள்விகளை எழுப்பியுள்ளது.
வதந்திகள்
விவாகரத்து வதந்திகளும் பின்னணியும்
விஜயின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் அண்மையில் நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத் தாக்கல் செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. அந்த மனுவில், தங்கள் திருமண வாழ்க்கை முறிந்துவிட்டதாகவும், விஜய் சக நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. 1999 இல் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். சங்கீதாவின் இந்தப் புகார், விஜய்-த்ரிஷா குறித்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
விவாதம்
சமூக வலைதளங்களில் விவாதம்
மெய்க்காப்பாளர் தனது மற்றொரு பதிவில் விஜய் இதயக் குறியீட்டைக் காட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதற்குப் பின்னணியாக கில்லி படத்தின் கொக்கரக்கோ பாடலைப் பயன்படுத்தியிருந்தார். விஜய்-த்ரிஷா கூட்டணியில் வெளியான இந்தப் படத்தின் பாடலைப் பயன்படுத்தியது வெறும் தற்செயலானது அல்ல என்று நெட்டிசன்கள் வாதிட்டு வருகின்றனர். குறிப்பாக எக்ஸ் மற்றும் ரெடிட் போன்ற தளங்களில், விஜயின் அரசியல் பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.