LOADING...
இந்தியா vs பாகிஸ்தான் மோதல் படைத்த உலக சாதனை! 2024 உலகக்கோப்பை இறுதிப் போட்டியையே ஓரம் தள்ளிய வியூவர்ஷிப்
டிஜிட்டல் பார்வையாளர்கள் மத்தியில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி புதிய வரலாற்று சாதனை

இந்தியா vs பாகிஸ்தான் மோதல் படைத்த உலக சாதனை! 2024 உலகக்கோப்பை இறுதிப் போட்டியையே ஓரம் தள்ளிய வியூவர்ஷிப்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 20, 2026
04:17 pm

செய்தி முன்னோட்டம்

2026 டி20 உலகக்கோப்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) கொழும்பில் நடைபெற்ற இந்தியா vs பாகிஸ்தான் லீக் போட்டி, மைதானத்தில் மட்டுமல்லாமல் டிஜிட்டல் தளங்களிலும் புதிய சரித்திரம் படைத்துள்ளது. ஜியோஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் மட்டும் இந்தப் போட்டியை 163 மில்லியன் (16.3 கோடி) பேர் நேரலையில் கண்டு ரசித்துள்ளனர். இது ஐசிசி டி20 வரலாற்றிலேயே ஒரு போட்டிக்குக் கிடைத்த அதிகபட்ச டிஜிட்டல் ரீச் ஆகும்.

சாதனை முறியடிப்பு

2024 இறுதிப் போட்டியின் சாதனையை முறியடித்தது

கடந்த 2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான இறுதிப் போட்டி பெற்ற பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட, இந்த ஒரு லீக் போட்டி அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. 2024 இல் நடந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிடும்போது, இந்த முறை டிஜிட்டல் தளத்தில் 56% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெரிய திரை தொலைக்காட்சிகளில் (ஸ்மார்ட் டிவி) இந்தப் போட்டியைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை கடந்த முறையை விட 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. அனைத்துத் திரைகளிலும் சேர்த்து சுமார் 2,000 கோடி நிமிடங்கள் இந்தப் போட்டி பார்க்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி

தொலைக்காட்சியிலும் மாபெரும் வெற்றி

டிஜிட்டல் மட்டுமல்லாமல், லீனியர் டிவியிலும் இந்தப் போட்டி சாதனை படைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக டிவிஆர் புள்ளிகளைப் பெற்ற போட்டியாக இது மாறியுள்ளது. கடந்த முறையை விட 71% கூடுதல் டிவி ரேட்டிங் கிடைத்துள்ளது. தற்கால டிஜிட்டல் யுகத்திலும் நேரடி ஒளிபரப்பிற்கு இருக்கும் மவுசு குறையவில்லை என்பதை இது காட்டுகிறது. இதற்கிடையே, இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான இந்தப் போட்டியில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தனது கணக்கை 8-1 என வலுப்படுத்தியுள்ளது.

Advertisement