LOADING...
இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி வாய்ப்பைத் தீர்மானிக்கும் ஆட்டத்தில் மழை குறுக்கிடுமா? கொல்கத்தா வானிலை நிலவரம்
இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதி வாய்ப்பைத் தீர்மானிக்கும் ஆட்டத்தின் வானிலை அறிக்கை

இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி வாய்ப்பைத் தீர்மானிக்கும் ஆட்டத்தில் மழை குறுக்கிடுமா? கொல்கத்தா வானிலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 01, 2026
09:17 am

செய்தி முன்னோட்டம்

2026 டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நெருங்கிவிட்டன. குரூப் 1 லிருந்து இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் 2 லிருந்து தென்னாப்பிரிக்காவும் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. கடைசி இடத்தைப் பிடிக்கப் போவது இந்திய கிரிக்கெட் அணியா அல்லது மேற்கிந்தியத் தீவுகளா என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த படுதோல்விக்குப் பிறகு, ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா மீண்டு வந்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள முடியும்.

வானிலை அறிக்கை

கொல்கத்தா வானிலை அறிக்கை: மழைக்கு வாய்ப்பு உண்டா?

கொல்கத்தாவில் கடந்த வாரம் திடீர் மழை பெய்ததால், இன்றைய போட்டி நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே இருந்தது. ஆனால், லேட்டஸ்ட் வானிலை அறிக்கையின்படி, இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. மழை வாய்ப்பு: 0% வெப்பநிலை: டாஸ் போடும் போது 27°C ஆகவும், ஆட்டம் முடியும்போது 24°C ஆகவும் இருக்கும். ஈரப்பதம்: ஆட்டத்தின் தொடக்கத்தில் 46% ஆக இருந்து, இரவு நேரத்தில் 69% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வானம் தெளிவாக இருக்கும் என்பதால், முழுமையான 20 ஓவர் போட்டியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

போட்டி ரத்து

போட்டி ரத்தானால் இந்தியாவுக்குப் பாதிப்பா?

ஒருவேளை எதிர்பாராத விதமாக மழை பெய்து போட்டி ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இந்தச் சூழலில், இந்தியாவை விடச் சிறந்த ரன் ரேட் கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். எனவே, இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமே அரையிறுதிக்குச் செல்லும் ஒரே வழியாகும்.

Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

ஈடன் கார்டன் பிட்ச் ரிப்போர்ட்

ஈடன் கார்டன் மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்குச் சாதகமான ஒன்றாகக் கருதப்படுகிறது. மேற்கிந்தியத் தீவுகள் பயிற்சியாளர் டேரன் சமி கூறுகையில், பிட்ச் காய்ந்த நிலையில் காணப்படுவதாகவும், ஆங்காங்கே புற்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த உலகக்கோப்பையில் இதுவரை இங்கு நடந்த 5 போட்டிகளும் பகல் நேரப் போட்டிகளாகவே இருந்தன. இன்று இரவு நேரத்தில் விளக்கொளியில் பிட்ச் எவ்வாறு செயல்படும் என்பது சவாலான ஒன்றாக இருக்கும். கொல்கத்தாவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஆடிய 4 டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement