LOADING...
குவியப்போகும் கோடிகள்! டி20 உலகக்கோப்பை 2026 பரிசுத்தொகை முழு விவரம்; வெற்றியாளர்களுக்குக் காத்திருக்கும் மெகா ஜாக்பாட்
டி20 உலகக்கோப்பை 2026 க்கான முழு பரிசுத்தொகை விவரம்

குவியப்போகும் கோடிகள்! டி20 உலகக்கோப்பை 2026 பரிசுத்தொகை முழு விவரம்; வெற்றியாளர்களுக்குக் காத்திருக்கும் மெகா ஜாக்பாட்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 06, 2026
05:05 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் பரிசுத்தொகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. வான்கடே மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த ஆண்டு மொத்த பரிசுத்தொகை சுமார் $13.5 மில்லியன் (சுமார் ₹113.8 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

சாம்பியன்

சாம்பியன் மற்றும் ரன்னர்-அப் பரிசு விவரம்

அகமதாபாத்தில் நடக்க உள்ள இறுதிப்போட்டியில் மகுடம் சூடும் அணிக்கு இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பரிசுத்தொகை காத்திருக்கிறது: சாம்பியன்: கோப்பையைத் தட்டிச் செல்லும் அணிக்கு சுமார் $3.1 மில்லியன் (சுமார் ₹27 கோடி) வழங்கப்படும். ரன்னர் அப்: இறுதிப்போட்டியில் நூலிழையில் வெற்றியைத் தவறவிடும் அணிக்கு சுமார் $1.65 மில்லியன் (சுமார் ₹14.6 கோடி) கிடைக்கும்.

அரையிறுதி

அரையிறுதி மற்றும் பிற அணிகளுக்கான தொகை

போட்டியின் பல்வேறு கட்டங்களில் வெளியேறிய அணிகளுக்கும் ஐசிசி கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளது: அரையிறுதியில் வெளியேறிய அணிகள் (இங்கிலாந்து & தென்னாப்பிரிக்கா): தலா $800,000 (சுமார் ₹7 கோடி). சூப்பர் 8 சுற்றில் வெளியேறியவை: தலா $385,000 (சுமார் ₹3.2 கோடி). குழுச் சுற்றில் வெளியேறியவை: தலா $250,000 (சுமார் ₹2.1 கோடி). கூடுதலாக, தொடரின் ஒவ்வொரு வெற்றிக்கும் போனஸ் தொகையாக சுமார் ₹26 லட்சம் வழங்கப்பட உள்ளது.

Advertisement

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டி மோதல்

வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. சஞ்சு சாம்சனின் அதிரடி ஃபார்ம் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு இந்தியாவிற்கு இரண்டாவது முறையாகக் கோப்பையையும், இந்தப் பெரும் பரிசுத்தொகையையும் பெற்றுத்தருமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement