LOADING...
பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பவுலர்கள்! 2024 உலகக்கோப்பையில் விக்கெட்டுகளை அள்ளிய டாப் 4 வீரர்கள் இவர்கள்தான்!
டி20 உலகக்கோப்பை 2024: மிரட்டிய டாப் 4 பந்துவீச்சாளர்கள்

பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பவுலர்கள்! 2024 உலகக்கோப்பையில் விக்கெட்டுகளை அள்ளிய டாப் 4 வீரர்கள் இவர்கள்தான்!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 02, 2026
07:47 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் மீண்டும் முன்னணி வீரர்கள் மீது திரும்பியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில், தங்கள் துல்லியமான பந்துவீச்சால் எதிரணிகளை நிலைகுலையச் செய்த டாப் 4 பந்துவீச்சாளர்களின் புள்ளிவிவரங்களை இங்கே காண்போம்.

#4

அன்ரிச் நோர்ட்ஜே (தென்னாப்பிரிக்கா)

தனது அசுர வேகத்தால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியவர் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அன்ரிச் நோர்ட்ஜே. இவர் போட்டிகளில் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவரது சராசரி 13.40 மற்றும் எகானமி 5.74 ஆக இருந்தது. இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

#3

ஜஸ்ப்ரீத் பும்ரா (இந்தியா)

இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் மன்னன் ஜஸ்ப்ரீத் பும்ரா, பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்கவே திணறும் வகையில் பந்துவீசினார். இவர் மொத்தம் 8 இன்னிங்ஸ்களில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது எகானமி ரேட் 4.17 மட்டுமே. இது டி20 கிரிக்கெட்டில் நம்பமுடியாத ஒரு சாதனையாகும். இதற்காக அவருக்குத் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

#2

அர்ஷ்தீப் சிங் (இந்தியா)

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு ஜஸ்ப்ரீத் பும்ராவைப் போலவே பந்துவீச்சில் மற்றொரு முக்கிய தூணாக இருந்தவர் அர்ஷ்தீப் சிங். இந்தத் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் விக்கெட்டுகளின் அடிப்படையில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார். இவர் 8 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமின்றி, டெத் ஓவர்களில் பந்துவீசி குறைவான ரன்களை விட்டுக் கொடுத்து அசத்தினார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

Advertisement

#1

ஃபசல்ஹக் ஃபாரூக்கி (ஆப்கானிஸ்தான்)

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஃபசல்ஹக் ஃபாரூக்கி, கடந்த உலகக்கோப்பையில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் 8 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். உகாண்டாவிற்கு எதிரான போட்டியில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவரும் அர்ஷ்தீப் சிங்கும் சம அளவிலான விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், எகானமி ரேட் அடிப்படையில் பார்த்தால், ஃபசல்ஹக் ஃபாரூக்கி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement