INDvsWI டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்றது இந்தியா
செய்தி முன்னோட்டம்
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (மார்ச் 1) நடக்கும் டி20 உலகக்கோப்பை 2026 இன் முக்கியமான சூப்பர் 8 ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இது அரையிறுதிக்குச் செல்வதை உறுதி செய்யும் வாழ்வா சாவா ஆட்டம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தியா
இந்திய அணியின் விளையாடும் லெவன்
கடந்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகப் அபார வெற்றி பெற்ற அதே அணியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்றும் களமிறக்கியுள்ளார். எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீரர்களின் பட்டியல்: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரீத் பும்ரா.
வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் விளையாடும் லெவன்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் பிராண்டன் கிங்கிற்கு பதிலாக ஆல் ரவுண்டர் அகீல் ஹொசைன் சேர்க்கப்பட்டுள்ளார். வீரர்களின் பட்டியல்> ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ரோவ்மன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், மேத்யூ ஃபோர்டு, அகீல் ஹொசைன், குடகேஷ் மோட்டி, ஷமார் ஜோசப்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨 Toss Update 🚨#TeamIndia have won the toss and elected to field first.
— BCCI (@BCCI) March 1, 2026
Updates ▶️ https://t.co/ur4pr8Bi3K#T20WorldCup | #MenInBlue | #INDvWI pic.twitter.com/Ji0mCrMFHH
முக்கியத்துவம்
ஆட்டத்தின் முக்கியத்துவம்
குரூப் 1 இல் தென்னாப்பிரிக்கா ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதியாகிவிட்ட நிலையில், இரண்டாவது இடத்தைப் பிடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே கட்டாயமாகும். ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஒரு விறுவிறுப்பான ஆட்டத்தை நாம் எதிர்பார்க்கலாம்.