
பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது?
செய்தி முன்னோட்டம்
200 பக்கங்களுக்கு மேல் கொண்ட நீல நிற, limited edition அரசாங்க கையேடு தான் கடந்த வாரத்தில் நாடு முழுவதும் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு ஒரு கையேடாகப் பயன்பட்டுள்ளது.
ஏனெனில் இது ஆயுத மோதலின் போது பல்வேறு அரசாங்கப் பிரிவுகளின் பதில் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டுகிறது.
எனினும் இந்த புக் பொது மக்கள் அணுக முடியாது.
The Union War Book 2010 என்பது ஒரிஜினல் லிமிடெட் பதிப்பாகும், மேலும் இது மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் அதை ஆண்டுதோறும் புதுப்பிக்க உதவிய அமைச்சரவை செயலக அதிகாரிகள் உள்ளிட்ட, மத்திய அமைச்சகங்களைத் தவிர ஒவ்வொரு மாநில தலைமைச் செயலாளருடனும் இந்த புத்தகத்தின் ஒரு நகல் இருக்கும்.
நெறிமுறை
நெறிமுறை செயல்பாடுகளை துல்லியமாக விளக்கும் guide
"போர் ஏற்பட்டால் அவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை இது முக்கிய அதிகாரிகளுக்குச் சொல்கிறது. எனவே எந்த குழப்பமும் இல்லை, மேலும் என்ன நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அனைவருக்கும் தெளிவான யோசனை உள்ளது," என்று ஒரு அதிகாரி தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.
தீயணைப்புப் பயிற்சிகள் முதல் வெளியேற்றங்கள் மற்றும் சைரன்கள் வரை, முழு அவசரகால பதில் பட்டியல் அவர்களின் மேசைகளில் கிடக்கும் இந்தப் புத்தகத்தால் கட்டளையிடப்படுகிறது.
போர் புத்தகத்தின் கன்டென்ட் காலனித்துவ காலத்திற்கு முந்தையது. ஆனால் ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் ஒரு புதிய பதிப்பு வெளியிடப்படுகிறது.
26/11 பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தகம் புது வடிவம் பெற்றது.
ஆனால் 2010 பதிப்பு காலாவதியானதாக இருக்காதா?
அப்டேட்
தொழில்நுட்பங்கள் குறித்து அவ்வப்போது குறிப்புகளை சேர்க்கும் புத்தகம்
நவீன தொழில்நுட்ப கருவிகளை பற்றி அது எப்படிப் பேசும் என்ற கேள்விக்கு,"புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் அல்லது சில நேரங்களில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் அதே வேளையில், மூன்று அமைச்சகங்களும் அவ்வப்போது குறிப்புகளை அனுப்புகின்றன. பின்னர் இவை புத்தகத்தில் சேர்க்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்ப புதுப்பிப்புகள் இப்படிதான் அந்த புத்தகத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது,'' என்று அதிகாரி கூறினார்.
பெரிய அளவிலான அணிதிரட்டல்களைக் கையாளுதல் மற்றும் தவறான தகவல்களை நிர்வகித்தல் முதல் உணவு விநியோகத்தை பராமரித்தல், எரிபொருள் மற்றும் மருந்துகளை வழங்குதல் வரை அனைத்தும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
இராணுவம், இரயில் பாதைகள், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, சுகாதாரம் உட்பட முழு அரசு எந்திர தயாரிப்புக்கான அடித்தளமாக இந்தப் புத்தகம் செயல்படுகிறது.