ஒருநாள் உலகக்கோப்பை: செய்தி

இந்தியாவில் தான் ஒருநாள் உலகக்கோப்பை! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி பேச்சுவார்த்தை!

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்க இந்தியா வருவதை உறுதி செய்ய ஐசிசி தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியும் பாகிஸ்தானின் லாகூரில் முகாமிட்டுள்ளனர்.

'விரைவில் இந்திய அணியில் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம்' : எம்எஸ்கே பிரசாத்

ஐபிஎல் 2023 சீசனில் அபாரமாக விளையாடிய இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விரைவில் இந்திய ஜெர்சியை அணிவதைக் காண முடியும் என்று எம்எஸ்கே பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தகுதிச்சுற்றுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை ஜிம்பாப்வேயில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பத்து அணிகள் பங்கேற்கும் என்று ஐசிசி செவ்வாய்க்கிழமை (மே 23) அறிவித்தது.

மே 27ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ மே 27 அன்று ஒரு சிறப்பு பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, இந்த கூட்டத்தில் ஒரு பணிக்குழுவை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

15 May 2023

பிசிசிஐ

'ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிப்போம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மிரட்டல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி கூறுகையில், ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை தங்கள் நாடு இழந்தால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்? சிஇஓ டேவிட் வைட் தகவல்!

இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட் இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

காப்பாற்றியது மழை! ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதை அடுத்து ஒருநாள் உலகக்கோப்பை 2023 இல் தென்னாப்பிரிக்கா தனது இடத்தை உறுதி செய்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்திய அணியின் முதல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டம்!

2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதும் போட்டிகள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் : ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா அயர்லாந்து?

வங்கதேசம் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஒருநாள் தொடரை மார்ச் மாதம் விளையாடிய நிலையில், தற்போது மீண்டும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் செவ்வாய் (மே 9) முதல் விளையாட உள்ளன.

உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ திட்டம்!

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா நடத்த உள்ளது.

ODI உலகக்கோப்பை 2023 : கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக இந்தியா வருவது உறுதி என தலைமை பயிற்சியாளர் தகவல்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், தற்போது காயத்தால் அவதிப்பட்டாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியுடன் அவர் நிச்சயம் இந்தியா வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் : அடுத்த 3 மாதம் ரெஸ்ட்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் நிலையில், லண்டனில் முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

2011 ஒருநாள் உலகக்கோப்பை வெற்றி நினைவுச் சின்னம் : வான்கடே மைதானத்தில் திறந்து வைத்தார் எம்.எஸ்.தோனி

2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பை வெற்றி நினைவகத்தை திறந்து வைத்தார்.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா

செவ்வாயன்று (ஏப்ரல் 4) ஜெர்சியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தகுதி சுற்றுக்கு அமெரிக்கா முன்னேறியுள்ளது.

44 ஆண்டுகளில் முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பை நேரடி தகுதியை இழந்தது இலங்கை

மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பெற்ற படுதோல்வியைத் தொடர்ந்து ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023க்கான நேரடித் தகுதியிலிருந்து இலங்கை அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் பங்கு பெறும் தகுதியை இழக்கும் இலங்கை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற இருந்த 2வது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை : ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை இறுதி செய்தது பிசிசிஐ

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி முடிவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்த முதல் வீரர்

2007 ஆம் ஆண்டு மார்ச் 16, 2007 அன்று இதே நாளில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நெதர்லாந்தை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ், ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்தார்.

இதே நாளில் அன்று : ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

1996 ஒருநாள் உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தானை இந்தியா மீண்டும் வீழ்த்திய தினம் இன்று.