ODI World Cup 203 : தொடர்நாயகன் விருதை வென்றார் விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விராட் கோலி 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் 11 போட்டிகளில் விளையாடி 95.65 என்ற உச்சபட்ச சராசரியில் 765 ரன்கள் குவித்துள்ளார்.
இதில் மூன்று சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடங்கும். மேலும், 68 பவுண்டரிகளையும் 9 சிக்சர்களையும் விளாசியுள்ளார்.
இதன் மூலம், 2003இல் சச்சின் டெண்டுல்கர் மற்றும் 2011இல் யுவராஜ் சிங்கிற்கு பிறகு இந்த விருதை வெல்லும் மூன்றாவது இந்தியர் ஆகியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
தொடர்நாயகன் விருது வென்றார் விராட் கோலி
Virat Kohli won the Player of the tournament award in World Cup 2023.
— Johns. (@CricCrazyJohns) November 19, 2023
- The GOAT 🐐 pic.twitter.com/AnV5Cay7i8