LOADING...
மகளிர் கிரிக்கெட்டில் இதுதான் மிகப்பெரிய வெற்றி; ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் வென்று சாதனை படைத்தது இந்திய அணி
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் வென்று சாதனை படைத்தது இந்திய அணி

மகளிர் கிரிக்கெட்டில் இதுதான் மிகப்பெரிய வெற்றி; ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் வென்று சாதனை படைத்தது இந்திய அணி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 31, 2025
07:50 am

செய்தி முன்னோட்டம்

நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வியாழக்கிழமை (அக்டோபர் 31) அன்று நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது. இந்த மலை போன்ற இலக்கைத் துரத்தியபோது, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் ஆகியோரின் மாஸ்டர் கிளாஸ் ஆட்டம் இந்தியாவிற்குக் கைகொடுத்தது.

சதம்

ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம்

ஹர்மன்பிரீத் கௌர் 88 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது வாழ்நாளின் சிறப்பான இன்னிங்ஸை ஆடி, 134 பந்துகளில் 127 ரன்கள் குவித்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றிப் பெறச் செய்தார். இந்த ரன் சேசிங் பல சாதனைகளைப் முறியடித்ததுடன், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இதுவே மிக அதிகமான இலக்கைத் துரத்திப் பெற்ற வெற்றியாகவும் பதிவானது. இதன் மூலம், உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான 15 போட்டிகள் தோல்வியடையாத சாதனை முடிவுக்கு வந்தது. இந்த வரலாற்று வெற்றியின் உணர்ச்சிப் பெருக்கால், ஆட்டத்திற்குப் பிறகு ஜெமிமா மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து நவம்பர் 2 அன்று இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.