Page Loader
கண்ணீர் விட்டு அழுத விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா; அஸ்வின் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி
கண்ணீர் விட்டு அழுத்த விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா

கண்ணீர் விட்டு அழுத விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா; அஸ்வின் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 30, 2023
05:39 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அணி வீரர்களிடையே நடந்த காட்சிகளை நினைவு கூர்ந்தார். ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னதாக, இந்தியா ஒரு போட்டியிலும் தோல்வியைத் தழுவாமல் வலுவாக இருந்தது. ஆனால் ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறாவது உலகக் கோப்பைப் பட்டத்தை வென்று சாதனை படைத்ததோடு, இந்தியாவின் கனவையும் சிதைத்தது. இந்நிலையில் சமீபத்திய ஒரு உரையாடலில் இது குறித்து பேசிய அஸ்வின், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தோல்விக்குப் பிறகு கண்ணீர் விட்டு அழுததாக கூறினார்.

Ashwin Ravichandra speaks about ODI World Cup loss in Youtube channel

யூடியூப் சேனலில் போட்டிக்கு பிந்தைய காட்சிகள் குறித்து பேசிய அஸ்வின்

தனது யூடியூப் சேனலில் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிந்தைய சம்பவங்கள் குறித்து பேசிய அஸ்வின், "நாங்கள் வலியை உணர்ந்தோம். ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் அழுது கொண்டிருந்தனர். அதைக் கண்டு சோகமாக இருந்தது. எப்படியிருந்தாலும், அவ்வாறு இருக்கக்கூடாது. இந்த அணி ஒரு அனுபவம் வாய்ந்த அணி. என்ன செய்வது என்று அனைவருக்கும் தெரியும். மேலும், இது தொழில்முறை, இதன் நடைமுறை அனைவருக்கும் தெரியும். கோலி மற்றும் ரோஹித் இருவரும் இரண்டு இயல்பான தலைவர்கள். அவர்கள் அணிக்கு இடம் அளித்து ஒரு அதிர்வை ஏற்படுத்தியதாக நான் நினைக்கிறேன்." என்று கூறினார். 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும், ரோஹித் தனது பேட்டிங் மற்றும் கேப்டன்சிக்காக போற்றுதலுக்குரியவர் என அஸ்வின் மேலும் கூறினார்.