
2023 ODI உலகக்கோப்பையில் பயன்படுத்திய பேட்டுக்கு ஓய்வு கொடுப்பதாக மார்னஸ் லாபுஷாக்னே பதிவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவுக்கு எதிரான 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஷாக்னே அவர் பயன்படுத்திய பேட்டுக்கு ஓய்வு அளித்ததாகத் தெரிகிறது.
அந்த போட்டியில் அவர் பயன்படுத்திய வில்லோ பேட் மூலம் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பட்டத்தை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில், அந்த போட்டியில் பயன்படுத்திய பேட் உடைந்து போயிருப்பதை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
2023 ஒருநாள் உலகக்கோப்பையைப் பொறுத்தவரை, முதலில் அறிவிக்கப்பட்ட தற்காலிக அணியில் இருந்து நீக்கப்பட்ட லாபுசாக்னே, தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு மீண்டும் அணியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒயிட் பால் கிரிக்கெட்டில் அதிகம் விளையாடவில்லை என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பேட்டராக அவர் உள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மார்னஸ் லாபுஷாக்னே எக்ஸ் பதிவு
Think it’s finally time to retire the World Cup final bat 🥲 pic.twitter.com/X7123Vt8vT
— Marnus Labuschagne (@marnus3cricket) August 12, 2024