Page Loader
ODI World Cup : ஒருநாள் உலகக்கோப்பையில் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த ஆடம் ஜம்பா
ஒருநாள் உலகக்கோப்பையில் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த ஆடம் ஜம்பா

ODI World Cup : ஒருநாள் உலகக்கோப்பையில் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்த ஆடம் ஜம்பா

எழுதியவர் Sekar Chinnappan
Nov 19, 2023
07:46 pm

செய்தி முன்னோட்டம்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை 240/10 என்று கட்டுப்படுத்தியது. இதில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா இந்த போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டை எடுத்தாலும், இதன் மூலம் உலகக்கோப்பை சாதனை புத்தகத்தில் அவர் நுழைந்துளளர். அதாவது, ஒரு உலகக்கோப்பை சீசனில் சுழற்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை இப்போது ஆடம் ஜம்பா பெற்றுள்ளார்.

Adam Zampa equals Mutiah Muralidharan record in ODI World Cup

ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஆடம் ஜம்பா ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு சீசனில் சுழற்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஆனார். முன்னதாக, 2007 ஒருநாள் உலகக்கோப்பையில் 23 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் முத்தையா முரளிதரனின் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். நடப்பு உலகக்கோப்பையில் ஜம்பா 11 போட்டிகளில் 22.39 சராசரியில் 23 விக்கெட்டுகளுடன் முடித்தார். இந்த எண்ணிக்கையில் மூன்று நான்கு விக்கெட்டுகள் அடங்கும். இதன் மூலம் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு முன்னர் 1999இல் ஷேன் வார்ன் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.