2007 டி20 உலகக் கோப்பை: இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற பாதையின் ரிவைண்ட்
செய்தி முன்னோட்டம்
2007-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி மிக மோசமாக வெளியேறியது. அந்த இக்கட்டான சூழலில், ஒரு இளம் அணியுடன் மகேந்திர சிங் தோனி தலைமையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதலாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா களமிறங்கியது. டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணியாகவும், மூன்று வெவ்வேறு வடிவங்களில் உலகக் கோப்பையை வென்ற முதல் மற்றும் ஒரே நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற திறமையானவர்களுடன் களத்தில் இறங்கிய இந்திய அணி வரலாறு படைத்தது.
தருணங்கள்
தொடரின் முக்கியத் தருணங்கள்
1. பாகிஸ்தானுடன் முதல் மோதல்: குரூப் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி சமனில் முடிய, 'பவுல் அவுட்' (Bowl-out) முறையில் இந்தியா 3-0 என வெற்றி பெற்று அசத்தியது. 2. யுவராஜ் சிங்கின் 6 சிக்ஸர்கள்: சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை படைத்தார். 3. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது: பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதியில் யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் (30 பந்துகளில் 70 ரன்கள்) இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பைனல்ஸ்
பரபரப்பான இறுதிப்போட்டி
இறுதிப்போட்டியில் மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 157 ரன்கள் எடுத்தது. கௌதம் கம்பீர் 75 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். பாகிஸ்தான் அணி வெற்றியை நெருங்கிய போது, கடைசி ஓவரை வீச அனுபவம் வாய்ந்த ஹர்பஜன் சிங்கிற்குப் பதிலாக இளம் வீரர் ஜோகிந்தர் சர்மாவை தோனி அழைத்தார். கடைசி 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது, மிஸ்பா-உல்-ஹக் அடித்த பந்தை ஸ்ரீசாந்த் கேட்ச் பிடிக்க, இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலாவது டி20 உலக கோப்பையை முத்தமிட்டது.