ஒருநாள் உலகக்கோப்பை: செய்தி

ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் சதமடித்த இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த பேட்டர் பென் ஸ்டோக்ஸ் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் நெதர்லாந்திற்கு எதிராக சதமடித்தார்.

இலங்கை vs நியூசிலாந்து ஒருநாள் உலகக்கோப்பை : வெல்லப்போவது யார்? கடந்தகால புள்ளி விபரங்கள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் சுற்றில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெறும் 41வது ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக தனிநபர் ஸ்கோர் அடித்த டாப் 5 வீரர்கள்

கிளென் மேக்ஸ்வெல் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு மேட்ச்-வின்னிங் இரட்டை சதத்தை அடித்ததன் மூலம் தனது முழுமையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ENGvsNED : பென் ஸ்டாக்ஸ் சதம்; முதல் இன்னிங்சில் 339 ரன்கள் குவித்தது இங்கிலாந்து

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து 339 ரன்கள் குவித்தது.

ENGvsNED ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் புதன்கிழமை (நவ.8) நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் உலகக்கோப்பை: இந்தியாவுடன் அரையிறுதியில் மோதும் அணி எது? போட்டியில் நான்கு அணிகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மூன்று அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

Sports Round Up : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

AUSvsAFG : தனியொருவனாக போராடி வென்ற கிளென் மேக்ஸ்வெல்; ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கான் வீரர் என்ற சாதனை படைத்த இப்ராஹிம் சத்ரான்

ஒருநாள் உலகக்கோப்பையில் இப்ராஹிம் சத்ரான் 129 ரன்கள் குவித்து, ஒருநாள் உலகக்கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கான் கிரிக்கெட் அணி வீரர் என்ற சாதனை படைத்தார்.

AUSvsAFG : ஆஸ்திரேலிய அணிக்கு 292 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 291 ரன்கள் எடுத்தது.

வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அணியிலிருந்து வெளியேற்றம்; காரணம் இதுதான்

இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸை டைம் அவுட் முறையில் அவுட்டாக்கி விவாதப்பொருளாகிய வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அணியிலிருந்து விலகியுள்ளார்.

AUSvsAFG : ஆப்கான் வீரர்களின் பயிற்சி முகாமுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சச்சின் டெண்டுல்கர்

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான மோதலுக்கு முன்னதாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆப்கான் கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென சந்தித்துள்ளார்.

AUSvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

நான் தப்பே பண்ணலைங்க; எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புலம்பிய 'டைம் அவுட்' புகழ் ஏஞ்சலோ மேத்யூஸ்

திங்கட்கிழமை (நவம்பர் 6) டெல்லியில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

Sports Round Up : கிரிக்கெட்டைத் தொடர்ந்து டென்னிசிலும் மகளிருக்கு சம ஊதியம்; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

BANvsSL : வங்கதேசம் வெற்றி; முடிவுக்கு வந்தது இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் திங்கட்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணி இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

AUSvsAFG : மீண்டும் வெர்டிகோ நோயால் அவதிப்படும் ஸ்டீவ் ஸ்மித்; ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மோத உள்ளது.

BANvsSL ஒருநாள் உலகக்கோப்பை : வங்கதேச அணிக்கு 280 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் திங்கட்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை வங்கதேசத்திற்கு 280 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

06 Nov 2023

டெல்லி

மூச்சுத்திணற வைக்கும் காற்று மாசு; டெல்லியில் போட்டியை திட்டமிட்டபடி நடத்த ஐசிசி முடிவெடுத்ததன் பின்னணி இதுதான்

2023 ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் திங்கட்கிழமை (நவம்பர் 6) அன்று டெல்லியில் இலங்கை மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் உலகக்கோப்பை : அரையிறுதி வாய்ப்புக்காக போராடும் 6 அணிகள்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளதோடு, இதுவரை அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த அணிகளாக உள்ளன.

BANvsSL ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் திங்கட்கிழமை (நவ.6) நடைபெறும் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் உலகக்கோப்பையில் படுதோல்வி; இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கூண்டோடு கலைத்த அரசு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடியதை அடித்து, இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு கலைக்கப்பட்டுள்ளது.

Sports Round Up : ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றது இந்திய ஹாக்கி அணி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

INDvsSA : ஜடேஜாவின் சுழலில் சுருண்ட தென்னாப்பிரிக்கா; 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

INDvsSA ஒருநாள் உலகக்கோப்பை : தென்னாப்பிரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு 327 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

INDvsSA ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.

INDvsSA ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கு மழையால் ஆபத்தா? வானிலை அறிக்கை சொல்வது இதுதான்

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் 37வது போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

Sports Round Up : ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (நவம்பர் 4) நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

NZ vs PAK: மழை குறுக்கிட DLS முறைப்படி பாகிஸ்தான் வென்றதாக அறிவிக்கப்பட்டது

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 35வது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டியானது அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு இரு அணிகளுக்கும் முக்கியமான ஒரு போட்டியாக இருந்தது.

NZ vs PAK: அதிரடி காட்டிய நியூசிலாந்து.. பாகிஸ்தானுக்கு 402 ரன்கள் இலக்கு

ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 35வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விறு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு இந்தப் போட்டி மிக முக்கியமான ஒன்று.

ENG vs AUS: டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது இங்கிலாந்து

உலகக்கோப்பைத் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார்.

NZ vs PAK: டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கும் பாகிஸ்தான்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 35வது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார்.

Sports Round Up: உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பாண்டியா; போல் பொசிஷனை வென்ற மேக்ஸ் வெர்ஸ்டப்பன்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் போட்டியிட்டன. நேற்றைய போட்டிக்கான டாஸை வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

NED vs AFG: இலக்கை எளிதாக சேஸ் செய்து நெதர்லாந்தை வீழ்த்திய ஆஃப்கானிஸ்தான்

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 34வது போட்டியில் இன்று நெதர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார் நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்.

நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக வெளியேறிய மேட் ஹென்றிக்கு மாற்று வீரர் அறிவிப்பு

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஏற்கனவே காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடாமல் இருந்து வரும் நிலையில், அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளரான மேட் ஹென்றியும் தொடரிலிருந்து வெளியேறியிருப்பதாக அறிவித்திருக்கிறது நியூசிலாந்து அணி.

NED vs AFG: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 34வது போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் மோதிக் கொள்ளும் முதல் போட்டி இது.

NED vs AFG: டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்

உலகக்கோப்பை தொடரின் இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.

ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஷமி

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 33வது போட்டியில் நேற்று இலங்கையை எதிர்கொண்டது இந்திய அணி. ஆசிய கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியைப் போன்றே, நேற்றும் 55 ரன்களுக்குகள் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, மாபெரும் 302 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது இந்தியா.

Sports Round Up : ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.