நான் தப்பே பண்ணலைங்க; எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புலம்பிய 'டைம் அவுட்' புகழ் ஏஞ்சலோ மேத்யூஸ்
திங்கட்கிழமை (நவம்பர் 6) டெல்லியில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஒருநாள் உலகக்கோப்பை விதிகளின்படி ஒரு பேட்டர் அவுட் அல்லது ரிட்டயர்டு ஆகி வெளியேறினால், அடுத்த பேட்டர் 2 நிமிடங்களில் பேட்டிங்கைத் தொடங்க வேண்டும். ஆனால், 25வது ஓவரில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழந்த பிறகு ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், நடுவர் அவுட் கொடுத்து வெளியேற்றினார். இந்நிலையில், இதனால் வெறுப்படைந்த ஏஞ்சலோ மேத்யூஸ், போட்டிக்கு பிறகு வெளியிட்ட எக்ஸ் பதிவில், தான் தாமதாக பேட்டிங்கை தொடங்கவில்லை என்று தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.