Page Loader
AUSvsAFG : ஆப்கான் வீரர்களின் பயிற்சி முகாமுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சச்சின் டெண்டுல்கர்
ஆப்கான் வீரர்களின் பயிற்சி முகாமுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சச்சின் டெண்டுல்கர்

AUSvsAFG : ஆப்கான் வீரர்களின் பயிற்சி முகாமுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சச்சின் டெண்டுல்கர்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2023
04:24 pm

செய்தி முன்னோட்டம்

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான மோதலுக்கு முன்னதாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆப்கான் கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென சந்தித்துள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் கனவில் உள்ள ஆப்கானிஸ்தான், ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது. இதற்கிடையில், திங்கட்கிழமை ஆப்கானிஸ்தான் பயிற்சி முகாமில் சச்சின் கலந்து கொண்டார். அவர் வீரர்களை வாழ்த்தினார். மேலும் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய சவாலாக என்ன இருக்க முடியும் என்பது குறித்து கலந்துரையாடினார். அவர் அணியுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது எடுத்த படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sachin Tendulkar visits Afghan Camp

இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று எனக்கு தெரியும்: சச்சின்

சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், சச்சின் டெண்டுல்கர் தனது அனுபவத்தை ஆப்கானிஸ்தான் அணியுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு அவர்களைப் புகழ்ந்தார். அவர், "உங்களில் பலர் ஐபிஎல் விளையாடியுள்ளீர்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பந்துவீச்சாளர்கள். ஆனால் உங்கள் பேட்டிங் அணியின் திறனை யாரும் அதிகம் பார்த்ததில்லை." என்று கூறினார். மேலும், "நம் அனைவருக்கும் எதையாவது சாதிக்க சில நோக்கம் தேவை. அது குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகிறது". "எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன். நான் மிகவும் இளமையாக இருந்தபோது ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று எனக்குத் தெரியும்." எனக் கூறினார். சச்சின் டெண்டுல்கர் ஐசிசியின் தூதராக உள்ள நிலையில், அதன் அடிப்படையில் ஆப்கான் அணியை குறிப்பிடத்தக்கது.