
NED vs AFG: இலக்கை எளிதாக சேஸ் செய்து நெதர்லாந்தை வீழ்த்திய ஆஃப்கானிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 34வது போட்டியில் இன்று நெதர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார் நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்.
முதலில் ஆடிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரரான வீஸ்லி பர்ரேசியைத் தவிர்த்து மற்ற மூன்று டாப் ஆர்டர் பேட்டர்களும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தின், அணியின் ரன்களை உயர்ந்த உதவினர்.
டாப் ஆர்டர் பேட்டர்களுள் சைபிராண்டு எங்கள்பிரெட்ச் அரைசதம் கடந்தார். ஆனால், அனைவருமே தவறான ரன்களுக்கு ஓடி ரன் அவுட் முறையிலேயே ஆட்டமிழந்தனர்.
அதன் பின்பு களமிறங்கிய பேட்டர்கள் அனைவருமே சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க, 46.3 ஓவர்களில் 179 ரன்களுக்கே சுருண்டது நெதர்லாந்து அணி.
ஒருநாள் உலகக்கோப்பை
எளிதாக வெற்றியை சுவைத்த ஆஃப்கானிஸ்தான்:
180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பேட்டர்களுக்கு நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் பெரிதாக எந்த சிரமத்தையும் கொடுக்கவில்லை.
தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஸாத்ரான் ஆகிய இருவரும் தங்களால் ஆன சிறிய பங்களிப்பை மட்டும் செய்து விட்டு ஆட்டமிழக்க, ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஹஸ்முத்துல்லா ஷாகிடி ஆகிய இருவரும் அரைசதம் கடந்து, வெற்றி பெறத் தேவையான ரன்களைக் குவித்தனர்.
இறுதியில் அஸ்மத்துல்லா ஒமர்சாயும் தன்னுடைய பங்களிப்பாக 31 ரன்களைக் குவிக்க 31.1 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எளிதாக சேஸ் செய்தது ஆஃப்கானிஸ்தான்.