Page Loader
ENGvsNED : பென் ஸ்டாக்ஸ் சதம்; முதல் இன்னிங்சில் 339 ரன்கள் குவித்தது இங்கிலாந்து
முதல் இன்னிங்சில் 339 ரன்கள் குவித்தது இங்கிலாந்து

ENGvsNED : பென் ஸ்டாக்ஸ் சதம்; முதல் இன்னிங்சில் 339 ரன்கள் குவித்தது இங்கிலாந்து

எழுதியவர் Sekar Chinnappan
Nov 08, 2023
06:12 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து 339 ரன்கள் குவித்தது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோ 15 ரன்களில் அவுட்டாகி வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மாலன் அபாரமாக விளையாடி 87 ரன்கள் குவித்தார். அதன் பின் வந்த ஜோ ரூட் 28 ரன்களில் வெளியேறிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று சதமடித்தார்.

Netherlands need 340 runs to win

பென் ஸ்டோக்ஸ் சதம்

நிலைத்து நின்று ரன் குவித்த பென் ஸ்டோக்ஸ் 84 பந்துகளில் 6 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 108 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்தவர்களில் கிறிஸ் வோக்ஸ் மட்டும் அரைசதம் விளாசி 51 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய பாஸ் டி லீடே 3 விக்கெட்டுகளையும், ஆர்யன் தத் மற்றும் லோகன் வான் பீக் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 2025 சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பை உறுதி செய்ய இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே முக்கியம் எனும் நிலையில், கடினமான இலக்குடன் நெதர்லாந்து பேட்டிங்கை தொடங்க உள்ளது.