Page Loader
INDvsSA ஒருநாள் உலகக்கோப்பை : தென்னாப்பிரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயம்
தென்னாப்பிரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயம்

INDvsSA ஒருநாள் உலகக்கோப்பை : தென்னாப்பிரிக்காவுக்கு 327 ரன்கள் இலக்கு நிர்ணயம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 05, 2023
06:06 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு 327 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா (40) மற்றும் ஷுப்மன் கில் (23) முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர். நடப்பு உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு அணி முதல் விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

India sets 327 runs target to South Africa

விராட் கோலி 49வது சதம்

மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் நிலைத்து நின்று ரன் குவித்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடிய நிலையில் 77 ரன்களில் அவுட்டானாலும், விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 101 ரன்கள் குவித்து சதமடித்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 49வது சதமாகும். இதன் மூலாம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.