Page Loader
ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் சதமடித்த இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்
ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் சதமடித்த இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்

ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் சதமடித்த இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 08, 2023
09:27 pm

செய்தி முன்னோட்டம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த பேட்டர் பென் ஸ்டோக்ஸ் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் நெதர்லாந்திற்கு எதிராக சதமடித்தார். புனே எம்சிஏ ஸ்டேடியத்தில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 84 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடினாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் குறைவான அளவிலேயே பென் ஸ்டோக்ஸ் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இது ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாவது சதமாகும் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பையில் இது அவரது முதல் சதமாகும். ஒருநாள் உலகக்கோப்பையில் ஆறு அரைசதங்களையும் அவர் அடித்துள்ளார்.

Ben Stokes first century in ODI World Cup

ஒருநாள் கிரிக்கெட்டில் 3,350 ரன்களை எடுத்த பென் ஸ்டோக்ஸ்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 182 ரன்கள் எடுத்த பென் ஸ்டோக்ஸ், தற்போது 113 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 40.71 சராசரியில் 3,379 ரன்கள் எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் ஐந்து சதங்கள் மற்றும் 23 அரைசதங்கள் அடங்கும். அவர் 95.37க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றுள்ளார். முன்னதாக, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் உலகக்கோப்பையில் பங்குபெறுவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓய்வை வாபஸ் பெற்று மீண்டும் அணியில் இணைந்தார். இருப்பினும், காயம் காரணமாக ஒருநாள் உலகக்கோப்பையில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், சரியான நேரத்தில் குணமடைந்து அணிக்குத் திரும்பினார்.