Page Loader
INDvsSA : ஜடேஜாவின் சுழலில் சுருண்ட தென்னாப்பிரிக்கா; 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

INDvsSA : ஜடேஜாவின் சுழலில் சுருண்ட தென்னாப்பிரிக்கா; 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 05, 2023
08:57 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கினார். ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 101 ரன்கள் குவித்தார். இதன் மூலம் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 49வது சதத்தை பதிவு செய்து அதிக சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.

South Africa all out for 83

83 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல் அவுட்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 327 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய நிலையில், குயின்டன் டி காக் 5 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து டெம்பா பவுமா மற்றும் ஐடென் மார்க்ரமும் அடுத்தடுத்து பவர்பிளே முடிவதற்குள் அவுட்டாக 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதற்கு பின் வந்த வீரர்களும் ரவீந்திர ஜடேஜாவின் சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாக, 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.